2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜப்பான் அணியினை 203 ஓட்டங்களால் அபாரமாக வீழ்த்தியிருப்பதோடு, தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றது.
>>இலங்கை – இங்கிலாந்து தொடர்: டிக்கெட் விலைகள் வெளியீடு<<
குழு A உள்ள இலங்கை இளையோர் அணியும் ஜப்பான் அணியும் மோதிய போட்டியானது நமீபியாவின் விண்ட்ஹோக் மைதானத்தில் இன்று (17) ஆரம்பமாகியது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்பான் அணி, முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இது அந்த அணிக்குத் தவறான முடிவாக அமைந்தது என்பதை இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களே நிரூபித்தனர்.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான விரான் சாமுதித்த மற்றும் திமந்த மஹாவிதான ஆகிய இருவரும் இணைந்து ஜப்பான் பந்துவீச்சை அனைத்து கோணங்களிலும் சிதறடித்து ஓட்டங்கள் குவித்ததோடு, முதல் விக்கெட் இணைப்பாட்டமாக அபாரமாக 328 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது இளையோர் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் விக்கெட் ஒன்றுக்கு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது.
>>T20 உலகக் கிண்ணத்திற்கான கனடா அணிக்குழாம் வெளியீடு<<
இந்த இணைப்பாட்டத்திற்கு காரணமாகிய வீரர்களில் ஓருவரான விரான் சாமுதித்த இரட்டைச் சதத்தை நெருங்கிய நிலையில் 143 பந்துகளில் 26 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 192 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அவர் இதன் மூலம் இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக புதிய சாதனையினை நிலைநாட்டினார். மறுமுனையில் திமந்த மஹாவிதானவும் சதம் விளாசி 115 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்னர் அணியின் தலைவர் விமத் டின்சாரவின் அதிரடி பங்களிப்போடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 387 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ஆட்டமிழக்காது இறுதிவரை களத்திலிருந்த விமத் டின்சார 24 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார். ஜப்பான் அணி சார்பில் திமோதி மூரே 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பின்னர் 388 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய ஜப்பான் அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியில் ஜப்பான் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களுடன் சுருண்டு போட்டியில் படுதோல்வி அடைந்தது.
ஜப்பான் துடுப்பாட்டத்தில் ஹியூகோ கெல்லி சதம் கடந்து 101 ஓட்டங்கள் பெற்ற போதும் அது பிரயோசனமாகவில்லை. போட்டியின் ஆட்டநாயகனாக விரான் சாமுதித்த தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியில் வென்ற இலங்கை இளம் அணி தொடரில் அடுத்ததாக அயர்லாந்தின் 19 வயதின் கீழ் அணியினை திங்கட்கிழமை (19) எதிர்கொள்கின்றது.
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Dimantha Mahavithana | run out (Taylor Waugh) | 115 | 125 | 11 | 0 | 92.00 |
| Viran Chamuditha | b Timothy Moore | 192 | 143 | 26 | 1 | 134.27 |
| Dulnith Sigera | b Timothy Moore | 5 | 5 | 0 | 0 | 100.00 |
| Vimath Dinsara | not out | 44 | 24 | 1 | 2 | 183.33 |
| Kavija Gamage | b Timothy Moore | 4 | 4 | 0 | 0 | 100.00 |
| Chamika Heenatigala | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
| Extras | 25 (b 2 , lb 1 , nb 3, w 19, pen 0) |
| Total | 387/4 (50 Overs, RR: 7.74) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Kai Wall | 3 | 0 | 21 | 0 | 7.00 | |
| Charlie Hara-Hinze | 7 | 0 | 71 | 0 | 10.14 | |
| Kazuma Kato-Stafford (c) | 10 | 0 | 89 | 0 | 8.90 | |
| Nikhil Pol | 8 | 0 | 50 | 0 | 6.25 | |
| Nihar Parmar | 7 | 0 | 50 | 0 | 7.14 | |
| Hugo Kelly | 9 | 0 | 50 | 0 | 5.56 | |
| Timothy Moore | 6 | 0 | 43 | 3 | 7.17 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Nikhil Pol | lbw b Sethmika Seneviratne | 0 | 2 | 0 | 0 | 0.00 |
| Nihar Parmar | c Vimath Dinsara b Viran Chamuditha | 23 | 39 | 2 | 0 | 58.97 |
| Hugo Kelly | not out | 101 | 162 | 6 | 0 | 62.35 |
| Charlie Hara-Hinze | b Rasith Nimsara | 0 | 4 | 0 | 0 | 0.00 |
| Taylor Waugh | c Aadham Hilmy b Jeewantha Sriram | 18 | 34 | 2 | 0 | 52.94 |
| Kento Dobell | c Vimath Dinsara b Chamika Heenatigala | 0 | 2 | 0 | 0 | 0.00 |
| Kazuma Kato-Stafford (c) | run out (Dimantha Mahavithana) | 19 | 31 | 0 | 0 | 61.29 |
| Timothy Moore | run out (Chamika Heenatigala) | 0 | 8 | 0 | 0 | 0.00 |
| Chihaya Sekine | b Vigneshwaran Akash | 1 | 4 | 0 | 0 | 25.00 |
| Gabriel Hara-Hinze | not out | 9 | 15 | 1 | 0 | 60.00 |
| Extras | 13 (b 0 , lb 4 , nb 1, w 8, pen 0) |
| Total | 184/8 (50 Overs, RR: 3.68) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Sethmika Seneviratne | 3 | 0 | 9 | 1 | 3.00 | |
| Jeewantha Sriram | 10 | 0 | 53 | 1 | 5.30 | |
| Viran Chamuditha | 9 | 1 | 17 | 1 | 1.89 | |
| Rasith Nimsara | 6 | 1 | 21 | 1 | 3.50 | |
| Vigneshwaran Akash | 10 | 0 | 42 | 1 | 4.20 | |
| Dulnith Sigera | 2 | 0 | 6 | 0 | 3.00 | |
| Chamika Heenatigala | 6 | 0 | 16 | 1 | 2.67 | |
| Kavija Gamage | 4 | 0 | 16 | 0 | 4.00 | |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















