ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு

24
Sri Lanka U19 squad announced for World Cup 2026

இந்த ஆண்டு (2026) ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாம் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

>>2026 T20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய குழாம் வெளியீடு<<

கொழும்பு றோயல் கல்லூரி வீரரான விமத் டின்சார தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இலங்கையின் பல்வேறு பாடசாலைகளில் சிறப்பாக பிரகாசித்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இலங்கை இளம் அணியின் பிரதி தலைவராக கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் கவிஜ கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை யாழ். மண்ணினைச் சேர்ந்த மாலிங்க பாணியில் பந்துவீசும் வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஸ் ஆகியோருக்கும் இலங்கையின் உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடர் 2026ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அணி தனது முதல் லீக் போட்டியில் ஜனவரி 17ஆம் திகதி ஜப்பானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் தொடரில் இலங்கை அணி குழு ‘C’ இல் அவுஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை இளையோர் அணி வீரர்கள்:

  1. விமத் டின்சார – தலைவர் கொழும்பு றோயல் கல்லூரி
  2. கவிஜ கமகே – உப தலைவர் – கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி
  3. திமந்த மஹவிதான – கண்டி திரித்துவக் கல்லூரி
  4. வீரான் சாமுதித்த – சென். செர்வாதியஸ் கல்லூரி
  5. துல்னித் சிகரா – கொழும்பு மஹநாம கல்லூரி
  6. சாமிக ஹீன்டிகல – கொழும்பு மஹநாம கல்லூரி
  7. ஆதம் ஹில்மி – கண்டி திரித்துவக் கல்லூரி
  8. சமரிந்து நெத்சார – சென். செர்வாதியஸ் கல்லூரி
  9. செத்மிக செனவிரத்ன – கண்டி திரித்துவக் கல்லூரி
  10. குகதாஸ் மாதுலன் – யாழ்ப்பாணம்  சென். ஜோன்ஸ் கல்லூரி
  11. ரசித் நிம்சார – லைசியம் சர்வதேச பாடசாலை
  12. விக்னேஸ்வரன் ஆகாஷ் – கொழும்பு புனித ஜோசப் கல்லூரி
  13. ஜீவஹன் சிறிராம் – வெஸ்லி கல்லூரி, கொழும்பு
  14. செனுஜ வெக்குனகொட – கொழும்பு புனித ஜோசப் கல்லூரி
  15. மலின்த சில்வா – புனித செபாஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<