Home Tamil பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை

பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை

Sri Lanka tour of West Indies 2021

211
West Indies vs Sri Lanka 2021
ICC Twitter
 

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணி 377 என்ற பாரிய வெற்றியிலக்கை நிர்ணயித்துள்ளது.

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 250 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தநிலையில், ஆட்டத்தை தொடர்ந்த போதும், இன்றைய தினம் மேலதிகமாக 8 ஓட்டங்களை பெற்ற நிலையில், சகல விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது. இதில், நேற்றைய தினம் 49 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறைவுசெய்திருந்த பெதும் நிசங்க 51 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மே.தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஓட்டத்தை எட்ட போராடும் இலங்கை

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ

மேற்கிந்திய தீவுகள் அணி

க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்

பின்னர் 96 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மே.தீவுகள் அணி, போட்டியின் வெற்றியை கருத்திற்கொண்டு, வேகமாக ஓட்டங்களை குவிக்க முயற்சித்தது. இதில், அணித்தலைவர் க்ரைக் ப்ராத்வைட் மாத்திரம் நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.

முதல் இன்னிங்ஸை போன்று மிகச்சிறந்த ஆட்டத்தை ப்ராத்வைட் வெளிப்படுத்த, கெயல் மேயர்ஸ் வேகமாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து 85 ஓட்டங்களை பெற்றிருந்த க்ரைக் ப்ராத்வைட், துஸ்மந்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், முதல் இன்னிங்ஸில் இவரின் பிடியெடுப்பை தவறவிட்ட ஓசத பெர்னாண்டோ, இரண்டாவது இன்னிங்ஸிலும் 34 ஓட்டங்களை பெற்றிருந்த போது கிடைத்த இலகுவான பிடியெடுப்பை தவறவிட்டார்.

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், அணிக்கு தேவையான வேகத்தில் அரைச்சதம் கடந்து 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மே.தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி, 29 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில், லஹிரு திரிமான்ன 17 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 11 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்துள்ள வெற்றியிலக்கை எட்டுவதற்கு, ஆட்டத்தின் இறுதிநாளான நாளை இலங்கை அணி 348 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Result

Match drawn

Sri Lanka
258/10 (108) & 193/2 (79)

West Indies
354/10 (111.1) & 280/4 (72.4)

Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite b Dushmantha Chameera 126 311 13 0 40.51
John Campbell c Niroshan Dickwella b Suranga Lakmal 5 24 1 0 20.83
Nkrumah Bonner b Suranga Lakmal 0 6 0 0 0.00
Kyle Mayers c Niroshan Dickwella b Vishwa Fernando 49 61 8 0 80.33
Jermaine Blackwood c Niroshan Dickwella b Suranga Lakmal 18 29 2 1 62.07
Jason Holder c Lahiru Thirimanne b Dhananjaya de Silva 30 34 5 0 88.24
Joshua Da Silva c Niroshan Dickwella b Dushmantha Chameera 1 35 0 0 2.86
Alzarri Joseph lbw b Lasith Embuldeniya 29 41 3 1 70.73
Rahkeem Cornwall c Vishwa Fernando b Suranga Lakmal 73 92 10 1 79.35
Kemar Roach c Niroshan Dickwella b Dushmantha Chameera 9 36 1 0 25.00
Shannon Gabriel not out 1 5 0 0 20.00


Extras 13 (b 0 , lb 6 , nb 7, w 0, pen 0)
Total 354/10 (111.1 Overs, RR: 3.18)
Bowling O M R W Econ
Suranga Lakmal 28 11 94 4 3.36
Vishwa Fernando 27 4 71 1 2.63
Lasith Embuldeniya 25 5 88 1 3.52
Dushmantha Chameera 21.1 4 69 3 3.27
Dhananjaya de Silva 10 3 26 1 2.60
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Nkrumah Bonner b Alzarri Joseph 1 17 0 0 5.88
Lahiru Thirimanne b Kemar Roach 55 106 6 0 51.89
Oshada Fernando lbw b Kyle Mayers 18 71 1 0 25.35
Dinesh Chandimal c Hayden Walsh b Shannon Gabriel 44 101 5 0 43.56
Dhananjaya de Silva lbw b Jermaine Blackwood 39 140 1 0 27.86
Pathum Nissanka c Hayden Walsh b Kemar Roach 51 131 0 0 38.93
Niroshan Dickwella c Joshua Da Silva b Jason Holder 20 25 0 0 80.00
Suranga Lakmal c Kraig Brathwaite b Alzarri Joseph 6 9 0 0 66.67
Dushmantha Chameera c Joshua Da Silva b Jason Holder 2 26 0 0 7.69
Lasith Embuldeniya not out 5 21 0 0 23.81
Vishwa Fernando c Joshua Da Silva b Kemar Roach 0 2 0 0 0.00


Extras 17 (b 4 , lb 5 , nb 7, w 1, pen 0)
Total 258/10 (108 Overs, RR: 2.39)
Bowling O M R W Econ
Kemar Roach 19 5 59 3 3.11
Shannon Gabriel 16 3 37 1 2.31
Alzarri Joseph 22 4 64 2 2.91
Jason Holder 21 3 39 2 1.86
Kyle Mayers 11 7 10 1 0.91
Rahkeem Cornwall 15 5 25 0 1.67
Jermaine Blackwood 4 0 16 1 4.00
Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite b Dushmantha Chameera 85 196 4 0 43.37
John Campbell c Niroshan Dickwella b Suranga Lakmal 10 25 1 0 40.00
Jermaine Blackwood c Niroshan Dickwella b Dushmantha Chameera 18 41 2 0 43.90
Kyle Mayers lbw b Suranga Lakmal 55 76 8 0 72.37
Jason Holder not out 71 88 7 0 80.68
Joshua Da Silva not out 20 16 2 0 125.00


Extras 21 (b 2 , lb 12 , nb 6, w 1, pen 0)
Total 280/4 (72.4 Overs, RR: 3.85)
Did not bat Nkrumah Bonner, Alzarri Joseph, Rahkeem Cornwall, Kemar Roach, Shannon Gabriel,

Bowling O M R W Econ
Suranga Lakmal 14 3 62 2 4.43
Vishwa Fernando 12.4 1 49 0 3.95
Dhananjaya de Silva 28 3 81 0 2.89
Dushmantha Chameera 18 0 74 2 4.11


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Rahkeem Cornwall b Alzarri Joseph 39 114 5 0 34.21
Dimuth Karunarathne lbw b Kyle Mayers 75 176 9 0 42.61
Oshada Fernando not out 66 119 8 0 55.46
Dinesh Chandimal not out 10 66 1 0 15.15


Extras 3 (b 0 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 193/2 (79 Overs, RR: 2.44)
Did not bat Dhananjaya de Silva, Pathum Nissanka, Niroshan Dickwella, Suranga Lakmal, Lasith Embuldeniya, Dushmantha Chameera, Vishwa Fernando,

Bowling O M R W Econ
Kemar Roach 12 2 33 0 2.75
Jason Holder 10 3 24 0 2.40
Rahkeem Cornwall 26.4 8 53 0 2.01
Shannon Gabriel 5.2 2 20 0 3.85
Alzarri Joseph 10 2 33 1 3.30
Jermaine Blackwood 6 1 17 0 2.83
Kraig Brathwaite 3 0 7 0 2.33
Kyle Mayers 6 4 5 1 0.83




மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க