இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க குழாத்தில் உபாதையினால் அணியிலிருந்து வெளியேறியிருந்த அணித்தலைவர் தெம்பா பௌவுமா மீண்டும் அழைக்ககப்பட்டுள்ளார்.
>>தென்னாபிரிக்க தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு<<
தெம்பா பௌவுமாவுடன் இறுதியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடாவும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இவர்களுடன் கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், ஜெரால்ட் கோட்ஷி, மார்கோ ஜென்சன் மற்றும் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் ஆகிய முன்னணி வீரர்களும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் 27ம் திகதி டர்பன் – கிங்ஸ்மீட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி டிசம்பர் 5ம் திகதி ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா குழாம்
தெம்பா பௌவுமா (தலைவர்), டேவிட் பெடிங்கம், ஜெரால்ட் கோட்ஷி, டோனி டி ஷோர்ஷி, மார்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பெட்டர்சன், காகிஸோ ரபாடா, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ், ரயன் ரெக்கில்டன், கெயல் வெர்ரைன்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<