Home Tamil முதல் T20I போட்டியினைப் பறிகொடுத்த இலங்கை அணி

முதல் T20I போட்டியினைப் பறிகொடுத்த இலங்கை அணி

126

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான, T20I தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இலங்கைக்கு எதிரான T20I தொடரிலிருந்து சூர்யகுமார், சஹார் நீக்கம்!

மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லக்னோவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கினார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி உபாதைச் சிக்கல்கள் காரணமாக குசல் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷன ஆகியோருக்கு ஓய்வு வழங்கிய நிலையில் ஜெப்ரி வன்டர்செய் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரினை அணிக்குள் இணைத்திருந்தது.

மறுமுனையில் இந்திய அணி T20I போட்டிகளில் சகலதுறைவீரரான தீபக் ஹூடாவினை அறிமுகம் செய்திருந்தது.

இலங்கை அணி

பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பிரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வென்டர்சே, லஹிரு குமார

இந்திய அணி

ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவிந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷால் படேல், புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்

இதனையடுத்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு அதன் தலைவர் ரோஹிட் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அட்டகாசமான ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர்.

இரண்டு வீரர்களும் போட்டியின் பவர் பிளேயில் இருந்து, பௌண்டரி மழை பொழிந்திருந்ததுடன் தமது அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 111 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து, இலங்கை அணிக்கு ஆறுதலாக இந்திய அணியின் முதல் விக்கெட்டினை லஹிரு குமார கைப்பற்றியிருந்தார். அதன்படி லஹிரு குமாரவின் பந்துவீச்சுக்கு இரையான ரோஹிட் சர்மா 32 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஒருநாள், T20I தொடர்களுக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு

எனினும் மறுமுனையில் தன்னுடைய இரண்டாவது T20I அரைச்சதத்துடன், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் இஷான் கிஷன் 56 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களை எடுக்க, மறுமுனையில் ஆட்டமிழக்காதிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய 04ஆவது T20I அரைச்சதத்துடன் 28 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணியினர், ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டியிருந்ததுடன் மந்த கதியிலும் ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதோடு, போட்டியிலும் தோல்வியினைத் தழுவியது.

இந்தியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பெற்ற சரித் அசலன்க 47 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, துஷ்மன்த சமீரவும் இறுதி வரை களத்தில் நின்று 14 பந்துகளுக்கு 24 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் புவ்னேஸ்வர் குமார் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துடுப்பாட்டவீரர் இஷான் கிஷன் தெரிவாகியிருந்தார். இனி இரு அணிகளும் பங்கெடுக்கும் இந்த T20I தொடரின் அடுத்த போட்டி சனிக்கிழமை (26) தரம்சாலாவில் நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
137/6 (20)

India
199/2 (20)

Batsmen R B 4s 6s SR
Rohit Sharma b Lahiru Kumara 44 32 2 1 137.50
Ishan Kishan c Janith Liyanage  b Dasun Shanaka 89 56 7 2 158.93
Shreyas Iyer not out 57 28 0 0 203.57
Ravindra Jadedja not out 3 4 0 0 75.00


Extras 6 (b 0 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 199/2 (20 Overs, RR: 9.95)
Bowling O M R W Econ
Dushmantha Chameera 4 0 42 0 10.50
Lahiru Kumara 4 0 43 1 10.75
Chamika Karunaratne 4 0 46 0 11.50
Praveen Jayawickrama 2 0 15 0 7.50
Jeffery Vandersay 4 0 34 0 8.50
Dasun Shanaka 2 0 19 1 9.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b 0 1 0 0 0.00
Kamil Mishara  c Rohit Sharma b Bhuvneshwar Kumar 13 12 0 0 108.33
Janith Liyanage  c Sanju Samson b Shreyas Iyer 11 17 0 0 64.71
Charith Asalanka not out 53 47 0 0 112.77
Dinesh Chandimal st Ishan Kishan b Ravindra Jadedja 10 9 0 0 111.11
Dasun Shanaka c Bhuvneshwar Kumar b Yuzvendra Chahal 3 6 0 0 50.00
Chamika Karunaratne c Ishan Kishan b Shreyas Iyer 21 14 0 0 150.00
Dushmantha Chameera not out 24 14 0 0 171.43


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 137/6 (20 Overs, RR: 6.85)
Bowling O M R W Econ
Bhuvneshwar Kumar 2 0 9 2 4.50
Jasprit Bumrah 3 0 19 0 6.33
Axar Patel 2 0 10 0 5.00
Yuzvendra Chahal 3 0 11 1 3.67
Shreyas Iyer 3 0 36 2 12.00
Ravindra Jadedja 4 0 28 1 7.00
Deepak Chahar 3 0 24 0 8.00



முடிவு – இந்திய அணி 62 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<