இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் T20i மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
>>உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்<<
இங்கிலாந்திற்கு அடுத்த ஆண்டின் செப்டம்பர் மாதம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடவிருக்கின்றது. இந்த தொடர்களில் முதலாவதாக இரு அணிகளும் பங்கெடுக்கும் T20i தொடர் செப்டம்பர் 15 தொடக்கம் 19 வரையில் இடம்பெறவிருப்பதோடு, அதன் பின்னர் ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 தொடக்கம் 27 வரை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
தொடர் அட்டவணை
T20i தொடர்
- முதல் போட்டி – 15 செப்டம்பர் – செளத்தம்ப்டன்
- இரண்டாவது போட்டி – 17 செப்டம்பர் – கார்டிப்
- மூன்றாவது போட்டி – 19 செப்டம்பர் – மன்செஸ்டர்
ஒருநாள் தொடர்
- முதல் போட்டி – 22 செப்டம்பர் – டேர்ஹம்
- இரண்டாவது போட்டி – 24 செப்டம்பர் – லீட்ஸ்
- மூன்றாவது போட்டி – 27 செப்டம்பர் – லண்டன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<