Home Tamil T20 தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இலங்கை கிரிக்கெட் அணி

T20 தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இலங்கை கிரிக்கெட் அணி

322

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களை 9 விக்கெட்டுக்களால் இலகுவாக தோற்கடித்திருக்கின்றது. 

இன்னும், இலங்கைக்கு எதிரான இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 

Video – Nuwan Pradeep இன் எதிர்பார்ப்பு நாளைய தினம் வெற்றியளிக்குமா?

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியின் …….

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (30) கேப்பா நகரில் ஆரம்பமானது.  போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார். 

இப்போட்டிக்கான இலங்கை அணி இந்த T20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியினை தழுவிய காரணத்தினால், T20 தொடரினை தக்கவைக்க இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, முதல் T20 போட்டியில் ஆடிய பானுக்க ராஜபக்ஷ, ஒசத பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாந்து மற்றும் இசுரு உதான ஆகியோர் இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்தனர். 

இலங்கை அணி 

குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க, அவிஷ்க பெர்னாந்து, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, லக்ஷன் சந்தகன், நுவன் பிரதீப், இசுரு உதான, லசித் மாலிங்க (அணித்தலைவர்)

மறுமுனையில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மிச்செல் ஸ்டார்க்கிற்கு பதிலாக மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான பில்லி ஸ்டேன்லேக் அழைக்கப்பட்டிருந்தார்.  

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பில்லி ஸ்டேன்லேக், கேன் ரிச்சர்ட்சன், அடம் ஷம்பா

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. ஆரம்ப துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வந்த குசல் மெண்டிஸ் முதல் போட்டி போன்று ஒரு ஓட்டத்துடன் (ரன் அவுட் முறையில்) ஆட்டமிழந்து இம்முறையும் ஏமாற்றினார்.  

Photo Album : Sri Lanka Vs Australia – 2nd T20I

அவரை அடுத்து இலங்கை அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க சற்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அவரது இன்னிங்ஸ் வெறும் 21 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது. 

குணத்திலக்கவினை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த அவிஷ்க பெர்னாந்து, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க ஆகியோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். எனினும், குசல் பெரேரா சற்று ஆறுதல் தந்தார். 

குசல் பெரேராவின் விக்கெட்டினை அடுத்து தொடர்ந்தும் தடுமாறிய இலங்கை கிரிக்கெட் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 117 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது.  

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் பெரேரா 19 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்று தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் பில்லி ஸ்டேன்லேக், பேட் கம்மின்ஸ், அஸ்டன் ஏகார் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 118 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து இலகுவாக அடைந்தது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வெற்றியினை டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தமது சிறந்த துடுப்பாட்டம் மூலம் உறுதி செய்திருந்தனர்.  

இதில், டேவிட் வோர்னர் அவரின் 14ஆவது T20 அரைச்சதத்தோடு 41 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, ஸ்டீவ் ஸ்மித் அவரின் 3ஆவது T20 அரைச்சதத்தோடு, 36 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் லசித் மாலிங்க மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னர் தெரிவாகியிருந்தார். 

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்வியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடனான T20 தொடரை முழுமையாக இழந்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, T20 தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (1) அவுஸ்திரேலிய வீரர்களை மீண்டும் ஆறுதல் வெற்றியொன்றினை எதிர்பார்த்த நிலையில் எதிர்கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

Result
Sri Lanka
117/10 (18.5)
Australia
118/1 (13)
Batsmen R B 4s 6s SR
Kusal Mendis run out (Ashton Agar) 1 4 0 0 25.00
Danushka Gunathilaka b Billy Stanlake 21 22 2 1 95.45
Avishka Fernando c Pat Cummins b Ashton Agar 17 16 1 0 106.25
Kusal Perera b Ashton Agar 27 19 2 1 142.11
Niroshan Dickwella c Ashton Turner b Pat Cummins 5 3 1 0 166.67
Dasun Shanaka c  Alex Carey b Billy Stanlake 1 3 0 0 33.33
Wanindu Hasaranga st  Alex Carey b Adam Zampa 10 11 0 0 90.91
Isuru Udana c Kane Richardson b Pat Cummins 10 14 0 0 71.43
Lakshan Sandakan run out (Pat Cummins) 10 14 1 0 71.43
Lasith Malinga st  Alex Carey b Adam Zampa 9 5 2 0 180.00
Nuwan Pradeep not out 2 3 0 0 66.67
Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 117/10 (18.5 Overs, RR: 6.21)
Fall of Wickets 1-5 (1.4) Kusal Mendis, 2-29 (5.2) Danushka Gunathilaka, 3-53 (8.5) Avishka Fernando, 4-65 (9.6) Niroshan Dickwella, 5-75 (10.5) Kusal Perera, 6-75 (11.2) Dasun Shanaka, 7-93 (14.4) Wanindu Hasaranga, 8-95 (15.4) Isuru Udana, 9-108 (17.3) Lasith Malinga, 10-117 (18.6) Lakshan Sandakan,
Bowling O M R W Econ
Kane Richardson 3 0 17 0 5.67
Billy Stanlake 4 0 23 2 5.75
Pat Cummins 4 0 29 2 7.25
Ashton Agar 4 0 27 2 6.75
Adam Zampa 4 0 20 1 5.00

Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Kusal Perera b Lasith Malinga 0 1 0 0 0.00
David Warner not out 60 41 8 0 146.34
Steve Smith not out 53 36 5 0 147.22
Extras 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0)
Total 118/1 (13 Overs, RR: 9.08)
Fall of Wickets 1-1 (0.3) Aaron Finch,
Bowling O M R W Econ
Lasith Malinga 3 0 23 1 7.67
Nuwan Pradeep 3 0 26 0 8.67
Wanindu Hasaranga 1 0 18 0 18.00
Isuru Udana 2 0 16 0 8.00
Lakshan Sandakan 4 0 33 0 8.25
 

முடிவ – அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுக்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<