சுற்றுலா அவுஸ்திரேலிய 19 வயதின்கீழ் மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் மற்றும் ஒற்றை ஒருநாள் போட்டிக்கான இலங்கை 19 வயதின்கீழ் மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட இலங்கை அணியின் தலைவியாக மொறட்டுவ வேல்ஸ் மகளிர் கல்லூரியின் மனுதி நாணயக்கார செயல்படவுள்ளதுடன், துணைத் தலைவியாக மாத்தறை அநுர வித்தியாலயத்தின் ரஷ்மிகா செவ்வந்தி பெயரிடப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ரத்கம தேவபதிராஜ கல்லூரியிலிருந்து 5 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னார் வீரர் திலகரட்ன டில்ஷானின் புதல்வி லிமன்சா திலகரட்னவும் 15 பேர் கொண்ட இந்த குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>செப்டம்பரில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய U19 மகளிர் கிரிக்கெட் அணி<<
இம்மாதம் 20, 21,24,26,28 ஆகிய திகதிகளில் T20I போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை ஒருநாள் போட்டி செப்டெம்பர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப்; போட்டிகள் அனைத்தும் தம்புள்ளையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அஸ்திரேலிய 19 வயதின்கீழ் மகளிர் அணி நேற்று முன்தினம் (15ம் திகதி) இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை இளையோர் குழாம்: மனுதி நாணயக்கார (தலைவி), ரஷ்மிகா செவ்வந்தி (துணைத் தலைவி), சஞ்சனா காவிந்தி, விமோக்ஷி பாலசூரிய, ஹிருனி ஹன்சிகா, நெதாங்கி இசுரஞ்சலி, ஷஷினி கிம்ஹானி, அசேனி தலகுன, பிரமுதி மித்சரா, தனோத்யா செவ்மினி, சமுதி பிரபோதா, லிமன்சா திலகரத்ன, ரஷ்மி நெத்ராஞ்சலி, ரிஷ்மி சஞ்சனா, மிதாலி அயோத்யா.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<