இந்த ஆண்டு (2025) 21ஆவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஹொங்கோங் சிக்ஸ் கிரிக்கெட் தொடருக்கான 7 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராகும் சஹீன் அப்ரிடி
பரபரப்பான ஆறு பேர் கொண்ட (Six-a-side) இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணியை கடந்த ஆண்டு போன்று சகலதுறைவீரரான லஹிரு மதுசங்க வழிநடாத்தவுள்ளார்.
நவம்பர் 7 முதல் 9 வரை ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இம்முறை தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு, இலங்கை வீரர்கள் குழு D இல் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேநேரம் ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரின் நடப்புச் சம்பியன்களாக இலங்கை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இறுதியாக நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தடவையாக, ஹொங்கொங் சிக்ஸ் சம்பியன் பட்டத்தினை வென்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை குழாம் (Squad):
லஹிரு மதுசங்க, தனன்ஞய லக்ஷான், தானுக தாபரே, நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரக்கோன், தரிந்து ரத்நாயக்க, சஜித்த ஜயத்திலக்க, மொவின் சுபாசிங்க (மேலதிக வீரர் – Standby)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<