மெர்க்கன்டைல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினத்தில் 4 போட்டிகள் நடைபெற்றன. இதில் ஜோன் கீல்ஸ், மாஸ் யுனிச்செலா, கொமர்ஷல் கிரெடிட், டிமோ ஆகிய அணிகள் வெற்றியை ருசித்தன.
டெக்ஸ்சர்ட் ஜேர்சி எதிர் மாஸ் யுனிச்செலா
டெக்ஸ்சர்ட் ஜேர்சி மற்றும் மாஸ் யுனிச்செலா அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் யுனிச்செலா அணி முதலில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : தீபால் குணவர்தன / ஹேமந்த போடிக்
இதன்படி முதலில் ஆடிய டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களைப் பெற்றது. டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சரித் அசலன்க 48 ஓட்டங்களையும், உபுல் பண்டார 41 ஓட்டங்களையும், மினோத் பானுக 39 ஓட்டங்களையும், விஷாத் ரந்திக 28 ஓட்டங்களையும், லக்ஷன் சந்தகன் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர். மாஸ் யுனிச்செலா அணியின் பந்து வீச்சில் மலிங்கா பண்டார 54 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 246 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மாஸ் யுனிச்செலா அணி 36.2 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று 82 பந்துகள் மீதம் இருக்க 1 விக்கட்டால் வெற்றி பெற்றது. மாஸ் யுனிச்செலா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் நிரோஷன் திக்வெல்ல 40 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 40 ஓட்டங்களையும், திலக்ஷ சுமனசிறி 33 ஓட்டங்களையும், திலகரத்ன டில்ஷான் 31 ஓட்டங்களையும், பர்வீஸ் மஹ்ரூப் 24 ஓட்டங்களையும், டில்ருவான் பெரேரா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
டெக்ஸ்சர்ட் ஜேர்சி அணியின் பந்து வீச்சில் மிலிந்த சிரிவர்தன 34 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் லக்ஷன் சந்தகன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் ரணேஷ் பெரேரா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் லஹிரு குமார 69 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
போட்டியின் சுருக்கம்
டெக்ஸ்சர்ட் ஜேர்சி – 245/8 (50)
சரித் அசலன்க 48, உபுல் பண்டார 41, மினோத் பனுக்க 39, விஷாத் ரந்திக 28, லக்ஷன் சந்தகன் 25 *
மலிங்க பண்டார 2/54
மாஸ் யுனிச்செலா – 248 / 9 (36.2)
நிரோஷன் திக்வெல்ல 40, தனுஷ்க குணதிலக்க 40, திலக்ஷ சுமனசிறி 33, திலகரத்ன டில்ஷான் 31, பர்வீஸ் மஹ்ரூப் 24, டில்ருவான் பெரேரா 26
லக்ஷன் சந்தகன் 2/31, ரணேஷ் பெரேரா 2/35, மிலிந்த சிரிவர்தன 2/34, லஹிரு குமார 2/69
மாஸ் யுனிச்செலா அணி 1 விக்கட்டால் வெற்றி
ஹற்றன் நஷனல் வங்கி எதிர் கொமர்ஷல் கிரெடிட்
ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் கிரெடிட் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு என்.சி.சி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹற்றன் நஷனல் வங்கி அணி முதலில் கொமர்ஷல் கிரெடிட் அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : பிரதீப் உடவத்த / சாமர டி சொய்சா
இதன்படி முதலில் ஆடிய கொமர்ஷல் கிரெடிட் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 328 ஓட்டங்களைப் பெற்றது. கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாகத் துடுப்பாட்டத்தில் சாமர கபுகெதர அபாரமாக ஆடி 170 ஓட்டங்களையும், இமேஷ் உதயங்க 64 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 41 ஓட்டங்களையும் பெற்றனர். ஹற்றன் நஷனல் வங்கி அணியின் பந்து வீச்சில் விமுக்தி பெரேரா 55 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் சஜீவ வீரகோன் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
பின்னர் 329 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஹற்றன் நஷனல் வங்கி அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் கொமர்ஷல் கிரெடிட் அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஹற்றன் நஷனல் வங்கி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தெஷான் டயஸ் 64 ஓட்டங்களையும், மின்ஹாஜ் ஜலீல் 56 ஓட்டங்களையும், மாதவ வர்ணபுர 51 ஓட்டங்களையும், ஹசான் குணதிலக 43 ஓட்டங்களையும் பெற்றனர். கொமர்ஷல் கிரெடிட் அணியின் பந்து வீச்சில் லஹிரு மதுஷான் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
கொமர்ஷல் கிரெடிட் – 328/8 (50)
சாமர கபுகெதர 170, இமேஷ் உதயங்க 64, சதுரங்க டி சில்வா 41
விமுக்தி பெரேரா 3/55, சஜீவ வீரக்கோன் 3/60
ஹற்றன் நஷனல் வங்கி – 241/5 (50)
தெஷான் டயஸ் 64, மின்ஹாஜ் ஜலீல் 56, மாதவ வர்ணபுர 51, ஹசான் குணதிலக 43
லஹிரு மதுஷான் 2/33
கொமர்ஷல் கிரெடிட் அணி 87 ஓட்டங்களால் வெற்றி
மாஸ் எக்டிவ் எதிர் ஜோன் கீல்ஸ்
மாஸ் எக்டிவ் மற்றும் ஜோன் கீல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி FTZ கட்டுநாயக்க மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோன் கீல்ஸ் அணி முதலில் மாஸ் எக்டிவ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : ரஞ்சித் விஷ்வகுல / சந்திகா அமரசிஙஹ
இதன்படி முதலில் ஆடிய மாஸ் எக்டிவ் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது. மாஸ் எக்டிவ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜெஹன் முபாரக் 56 ஓட்டங்களையும், சசித்திர சேரசிங்ஹ 50 ஓட்டங்களையும், டில்ஷான் முனவீர 47 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 38 ஓட்டங்களையும் பெற்றனர். ஜோன் கீல்ஸ் அணியின் பந்து வீச்சில் உபுல் இந்திரசிறி 44 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்த விக்கும் பண்டார 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பின்னர் 259 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஜோன் கீல்ஸ் அணி 48.5 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று 7 பந்துகள் மீதம் இருக்க 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. ஜோன் கீல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு மிலந்த மறுபடியும் ஒருமுறை சிறப்பாக ஆடி 86 ஓட்டங்களையும், ஜனக குணரத்ன 40 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 36 ஓட்டங்களையும், இஷான் ஜயரத்ன ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர். மாஸ் எக்டிவ் அணியின் பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் சச்சித் பத்திரன 48 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
மாஸ் எக்டிவ் – 258/10 (47.1)
ஜெஹான் முபாரக் 56, சச்சித்திர சேரசிங்க 50, டில்ஷான் முனவீர 47, தனஞ்சயன டி சில்வா 38,
உபுல் இந்திரசிறி 4/44, விக்கும் பண்டார 3/46
ஜோன் கீல்ஸ் – 261/8 (48.5)
லஹிரு மிலந்த 86, ஜனக குணரத்ன 40, பானுக்க ராஜபக்ஷ 36, இஷான் ஜயரத்ன 35 *,
தனஞ்சய டி சில்வா 3/40, சச்சித் பத்திரண 2/48
ஜோன் கீல்ஸ் அணி 2 விக்கட்டுகளால் வெற்றி
சம்பத் வங்கி எதிர் டிமோ லங்கா
சம்பத் வங்கி மற்றும் டிமோ லங்கா அணிகளுக்கு இடையிலான போட்டி மொரட்டுவ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டிமோ லங்கா அணி முதலில் சம்பத் வங்கி அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
போட்டி நடுவர்கள் : சரத் குமார / எரிக் கன்னங்கர
இதன்படி முதலில் ஆடிய சம்பத் வங்கி 44.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. சம்பத் வங்கி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரொமேஷ் புத்திக 49 ஓட்டங்களையும், ப்ரிமோஷ் பெரேரா 40 ஓட்டங்களையும், நுவான் பெரேரா 36 ஓட்டங்களையும் பெற்றனர். டிமோ லங்கா அணியின் பந்து வீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், மதிஷ பெரேரா 34 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், திக்ஷில டி சில்வா 43 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
பின்னர் 222 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய டிமோ லங்கா அணி 43.4 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்று 38 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. டிமோ லங்கா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் லசித் அபேரத்னஆட்டம் இழக்காமல் 82 ஓட்டங்களையும், நிபுன் கருணாநாயக்க 47 ஓட்டங்களையும் பெற்றனர். சம்பத் வங்கி அணியின் பந்து வீச்சில் கசுன் ரஜித 58 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
போட்டியின் சுருக்கம்
சம்பத் வங்கி – 221 (44.3)
ரொமேஷ் புத்தக 49, ப்ரிமோஷ் பெரேரா 40, நுவான் பெரேரா 36
ரமேஷ் மெண்டிஸ் 2/20, மதீஷ பெரேரா 2/34, திக்ஷில டி சில்வா 3/43
டிமோ லங்கா – 225/7 (43.4)
லசித் அபேரத்ன 82 *, நிபுன் கருணாநாயக்க 47
கசுன் ராஜித 4/58
டிமோ லங்கா அணி 3 விக்கட்டுகளால் வெற்றி