சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>> ICC டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்கள்!
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (29) வரலாற்றுபூர்வமிக்க லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் ஆரம்பமாகின்றது.
ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரு அணிகளும் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை அடைந்திருக்க தொடரினை தக்க வைக்க கட்டாய வெற்றியினை எதிர்பார்த்துள்ள இலங்கை இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றது.
அதன்படி இலங்கை அணியில் குசல் மெண்டிஸிற்குப் பதிலாக பெதும் நிஸ்ஸங்க இணைக்கப்பட, வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ லஹிரு குமார மூலம் பிரதியிடப்பட்டிருக்கின்றார்.
இலங்கை XI
நிஷான்மதுஷ்க, திமுத்கருணாரத்ன, பெதும்நிஸ்ஸங்க, அஞ்செலோமெதிவ்ஸ், தனன்ஜயடிசில்வா, தினேஷ்சந்திமால், கமிந்துமெண்டிஸ், பிரபாத்ஜயசூரிய, மிலான்ரத்நாயக்க, அசிதபெர்னாண்டோ, லஹிருகுமார
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















