சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் பங்களாதேஷ் தொடரிலிருந்து ஒருசில மாற்றங்களை மாத்திரதே தேர்வுக்குழு ஏற்படுத்தியுள்ளது.
>>தென்னாபிரிக்க வீரர் முறையற்றவிதத்தில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு<<
அதன்படி பங்களாதேஷ் தொடரின்போது உபாதைக்குள்ளான வனிந்து ஹஸரங்கவுடன், எசான் மாலிங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இந்த மூவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், நுவனிது பெர்னாண்டோ மற்றும் பவன் ரத்நாயக்க ஆகிய இளம் வீரர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில் பவன் ரத்நாயக்க முதன்முறையாக ஒருநாள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
நுவனிது பெர்னாண்டோ 2023ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி அரைச்சதம் கடந்ததுடன், இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியொன்றில் விளையாடியிருந்தார்.
இவர்களை தவிர்த்து பங்களாதேஷ் தொடரில் விளையாடியிருந்த ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களாக குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, சதீர சமரவிக்ரம மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
>>இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!<<
சகலதுறை வீரர்களாக ஜனித் லியனகே மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோரும் பந்துவீச்சாளர்களாக மிலான் ரத்நாயக்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, நிசான் மதுஷ்க, சரித் அசலங்க (தலைவர்), சதீர சமரவிக்ரம கமிந்து மெண்டிஸ், நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, மிலான் ரத்நாயக்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, டில்சான் மதுசங்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















