ஒருநாள், T20i தொடர்களுக்காக இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணி

Sri Lanka tour of England 2021

1537

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் – ஜூலை மாத பகுதியில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read : முழுமையாக டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து

அதன்படி, குறித்த தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி ஜூன் 15ஆம் திகதி இங்கிலாந்தை அடையவுள்ளது. அங்கு செல்லும் இலங்கை அணி தங்களுடைய முதல் T20i போட்டியில் ஜூன் 23ஆம் திகதி விளையாடவுள்ளது. பின்னர் இரண்டாவது T20i போட்டி ஜூன் 24ம் திகதி நடைபெறவுள்ளது

முதல் இரண்டு போட்டிகளும் கார்டிப்பில் உள்ள ஷோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது போட்டி 26ஆம் திகதி சௌதெம்டனில் உள்ள ஏஜஸ் போவ்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பின்னர், முதல் ஒருநாள் போட்டியானது 29ஆம் திகதி டர்ஹாமில் உள்ள ரிவர்ஸைட், எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை முதலாம் திகதி லண்டனின் கியா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் மூன்றாவதும், இறுதிமான ஒருநாள்  போட்டி ஜூலை 4ஆம் திகதி பிரிஸ்டோல் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Watch video : “எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாட தயார்” – ஓசத பெர்னாண்டோ

தொடர் நிறைவடைந்த அடுத்த நாள் இலங்கை அணியானது மீண்டும் நாடு திரும்பும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

போட்டி அட்டவணை

  • முதல் T20i – 23 ஜூன் 2021 – ஷோபியா கார்டன்
  • 2வது T20i – 24 ஜூன் 2021 – ஷோபியா கார்டன்
  • 3வது T20i – 26 ஜூன் 2021 – ஏஜஸ் போவ்ல்
  • முதல் ஒருநாள் போட்டி – 29 ஜூன் 2021 – எமிரேட்ஸ்
  • 2வது ஒருநாள் போட்டி – 01 ஜூலை 2021 – கியா ஓவல்
  • 3வது ஒருநாள் போட்டி – 04 ஜூலை 2021 பிரிஸ்டோல்

மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க