இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்

2069

இலங்கை கிரிக்கெட் அணிக்கு, அவுஸ்திரேலிய அணியுடனான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் மந்த கதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டில் அபாராதம் வழங்கப்பட்டிருக்கின்றது

இலங்கை தொடரிலிருந்து வெளியேறும் ஸ்டீவ் ஸ்மித்

அந்தவகையில் இலங்கை அணியின் வீரர்கள் மந்த கதியில் பந்துவீசியமைக்காக அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20% இணை தண்டப்பணமாக செலுத்த, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினால் கட்டளை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணி, போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களையும் வீச வழங்கப்பட்டிருந்த நேரத்திற்குள் ஒரு ஓவரினை குறைவாக வீசியதாக குற்றம் சாட்டப்பட்டே அவர்களுக்கு, அபாராதம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மறுமுனையில், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க, தவறான வார்த்தைப் பிரயோகம் ஒன்றினு மேற்கொண்டது ஸ்டம்ப் ஒலிவாங்கியில் (Stump Mic) பதிவானதை அடுத்து அவருக்கு, அது தொடர்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பதோடு, அவருக்கு ஒரு நன்னடத்தை வீதி மீறல் புள்ளியும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

போராட்டத்திற்குப் பின் சுபர் ஓவரில் போட்டியியை பறிகொடுத்த இலங்கை

இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பில், மேலதிக விசாரணைகள் எதுவும் நடைபெறாது என ஐ.சி.சி. குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20I தொடரில், அவுஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்ற நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (15) கென்பராவில் ஆரம்பாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<