மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்

82

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே இன்று (3) நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்த நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நோக்கோடு இன்று இரண்டாவதும் கடைசியுமான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி கோக்ஸ் பசார் நகரில் ஆரம்பமாக இருந்தது. 

இலங்கையுடனான மோதலில் 2 முக்கிய வீரர்களை இழக்கும் துர்க்மெனிஸ்தான்

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில்…

எனினும், இன்றைய நாள் முழுவதும்  மழையின் இடையூறு காணப்பட்ட காரணத்தினால் போட்டியின் முதல் நாளினை நடாத்துவதற்கான சூழ்நிலை இருக்கவில்லை.  இதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. 

இனி நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை நிலைமைகள் சீரானதன் பின்னர் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<