தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் நாள் ஆதிக்கம் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி வசம்
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட்….
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியுடன் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் ஆகியவை கொண்ட தொடர்களில் ஆடுகின்றது.
அந்த வகையில் முதலாவதாக நடைபெறும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இந்த முதலாவது போட்டி கடந்த வியாழக்கிழமை (26) கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, தமது முதல் இன்னிங்ஸுக்காக 394 ஓட்டங்களை குவித்திருந்தது. பின்னர், இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் பின்னர், நல்ல முன்னிலை (200) ஒன்றுடன் தென்னாபிரிக்காவின் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த போதிலும், இலங்கை சார்பிலான அணியின் திறமையான பந்துவீச்சினால் அவ்வணி 109 ஓட்டங்களுடனேயே அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 310 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய, இலங்கை வீரர்கள் நேற்றைய (போட்டியின் மூன்றாம் நாள்) நாள் நிறைவில் 157 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் அணியின் தலைவரான கெளசால் சில்வா அரைச்சதம் ஒன்றினை தாண்டி 86 ஓட்டங்களுடனும், சம்மு அஷான் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
பெரேராக்களின் இணைப்பினால் மீண்டது இலங்கை
ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் அதிரடி பந்துவீச்சின் மூலம் இலங்கையுட…..
போட்டியின் இன்றைய நான்காவதும் இறுதியுமான நாளில் இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு வெற்றி பெற 7 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க, 153 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது.
பெறுமதியான அரைச்சதம் ஒன்றினை விளாசிய கெளசால் சில்வா, இன்றைய நாளில் ஐந்து ஓட்டங்களை மாத்திரம் குவித்து 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை நடந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சதமொன்றினை தவறவிட்ட கெளசால் சில்வா 10 பெளண்டரிகளை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், களத்தில் இருந்த சம்மு அஷான் பெறுமதியான 49 ஓட்டங்களை தனது தரப்பிற்காக பெற்றுத்தந்தார். சம்மு அஷானைத் தொடரந்து 19 வயதுடைய வீரரான கமிந்து மெண்டிஸ் மற்றும் சாமிக்க கருணாரத்ன ஜோடி வலுவான இணைப்பாட்டம் (67) ஒன்றினை பகிர்ந்தது.
இப்படியான துடுப்பாட்ட உதவிகளுடன் இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, 84.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 310 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.
இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு அரைச்சதம் ஒன்றுடன் துணைபுரிந்த கமிந்து மெண்டிஸ் 10 பெளண்டரிகள் அடங்களாக 67 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 32 ஓட்டங்களினையும் குவித்து ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
இலங்கை இளையோர் ஒருநாள் குழாம் அறிவிப்பு
இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட….
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் லுத்தோ சிபம்லா 2 விக்கெட்டுக்களை இந்த இன்னிங்ஸில் சாய்த்த போதிலும், இலங்கையின் தரப்பின் வெற்றியினை அவருக்கு தடுக்க முடியாது போயிருந்தது.
இதேநேரம் போட்டியில் இலங்கையின் வளர்ந்து வரும் அணியின் வெற்றிக்கு இடதுகை சுழல் வீரரான மலிந்த புஷ்பகுமார மொத்தமாக 12 விக்கெட்டுக்களை சாய்த்து உதவியிருந்ததோடு, அரைச்சதம் தாண்டிய கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுட்களை சாய்த்து சகலதுறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தார்.
இந்தப் போட்டியின் வெற்றியுடன் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும், இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி தொடரின் இரண்டாவதும் இறுதியுமான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி எதிர்கொள்கின்றது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
முடிவு – இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















