எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று T20I போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் சபையிடம் இலங்கை கிரிக்கெட் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
>>ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு<<
குறித்த இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை வரவுள்ள இந்திய அணி, மேலும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை வளாகத்தில் இன்று (02) ஊடகவியலாளர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலொன்றின் போது இந்த விடயத்தினை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையின் இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இது தொடர்பில் வெளியாகவில்லை.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















