இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா T10 சுப்பர் லீக்!

465

இலங்கை கிரிக்கெட் சபை லங்கா T10 சுப்பர் லீக் தொடர் ஒன்றினை நடத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில், தொடருக்கான பங்குதாரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அழைப்புவிடுத்துள்ளது.

கார் விபத்தில் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்

T10 தொடர் நடத்தப்படும் காலம் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படாத போதிலும், அடுத்த ஆண்டு குறித்த தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், பங்குதாரர்கள் மற்றும் அணி உரியமையாளர்கள் இம்மாதம் 12ம் திகதிக்குள் தங்களுடைய கேள்விப்பத்திரங்களை கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் குறித்து அஷ்லி டி சில்வா குறிப்பிடுகையில், “இலங்கை அணியின் பொருளாதார உயர்வுக்காக இந்த தொடர் நடத்தப்படுகிறது. அதேநேரம், இதுவொரு புதிய அம்சம். அத்துடன், பார்வையாளர்களுக்கும் விருந்தாக அமையும். எனவே, நாட்டுக்கு கிரிக்கெட்டில் புதிய அம்சம் ஒன்றை எடுத்துவர விரும்புகிறோம்” என்றார்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யவுள்ள இந்த T10 தொடரில், ஒரு அணி எதிரணியுடன் இரண்டு போட்டிகளின் மோதும் வகையில், மொத்தமாக 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. குழுநிலைப் போட்டிகளுக்கு பின்னர், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடரில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணி உட்பட, மொத்தமாக 6 அணிகள் விளையாடவுள்ளன. அணிக்கு தலா 16 வீரர்கள் உள்வாங்கப்படுவர் என்பதுடன், 6 வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைக்க முடியும்.

இதேவேளை, பயிற்றுவிப்பாளர்கள் பட்டியலில் மொத்தமாக 10 பேர் இணைய முடியும் என்பதுடன், 2 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Video – தடுமாற்றம் காணும் இலங்கை – பங்களாதேஷ் தொடர் |Sports RoundUp – Epi 134

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தொடராக T10 லீக்கின் போட்டிகள் அனைத்தும் தம்புள்ளை மற்றும் பல்லேகலை கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் புனரமைப்பு பணிகளால் அங்கு போட்டிகள் நடைபெறாது என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<