பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம்கள் அறிவிப்பு

Sri Lanka tour of Pakistan 2025

145

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்மற்றும் முத்தரப்பு T20I தொடர்களுக்கான இலங்கை குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் ஐந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்க உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி

எனவே அவருக்கு பதிலாக எசான் மாலிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன்மிலான் ரத்நாயக்கநுவனிது பெர்னாண்டோதுனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்க ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷாரலஹிரு உதாரபிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை ஒருநாள் குழாம் 

சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்கலஹிரு உதாரகமில் மிஷாரகுசல்  மெண்டிஸ்சதீர சமரவிக்ரமகமிந்து மெண்டிஸ்ஜனித் லியனகேபவன் ரத்நாயக்கவனிந்து ஹஸரங்கமஹீஸ் தீக்ஷனஜெப்ரி வெண்டர்சேதுஷ்மந்த சமீரஅசித பெர்னாண்டோபிரமோத் மதுசான்எசான் மாலிங்க 

இதேவேளை பாகிஸ்தான்சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் முக்கியமான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதில் உபாதை காரணமாக மதீஷ பதிரண அணியில் இணைக்கப்படவில்லைஇவருடன் நுவனிது பெர்னாண்டோசாமிக்க கருணாரத்னதுனித் வெல்லாலகே மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மதீஷ பதிரணவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளதுடன்பானுக ராஜபக்ஷஎசான் மாலிங்கதுஷான் ஹேமந்த மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் அணியில் இணைக்கப்படடுள்ளனர். 

இதில் பானுக ராஜபக்ஷ இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்ததுடன்மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ரிஷப் பண்ட்

இலங்கை T20I குழாம் 

சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்ககுசல் மெண்டிஸ்குசல் பெரேராதசுன் ஷானககமில் மிஷாரகமிந்து மெண்டிஸ்பானுக ராஜபக்ஷஜனித் லியனகேவனிந்து ஹஸரங்கமஹீஸ் தீக்ஷனதுஷான் ஹேமந்ததுஷ்மந்த சமீரநுவான் துஷாரஅசித பெர்னாண்டோஎசான் மாலிங்க 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன்முத்தரப்பு T20I 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<