‘ஒற்றுமைக்கான கிரிக்கெட்’ (Cricket for Unity) என்னும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணப் பிராந்தியத்தில் காணப்படும், உள்ளூர் அணிகள் பங்குகொள்ளும், மாபெரும் T-20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக சாய்ந்தமருது வொலிவெரியன் பொது மைதானத்தில் நேற்று (5) ஆரம்பமாகியது.
விரைவில் ஆரம்பமாகவுள்ள கிழக்கின் மாபெரும் “ஸ்பீட் T-20 கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் மோதிக்கொள்ளும் மாபெரும் சமரான …
இத்தொடரின் ஆரம்ப நிகழ்விற்கு, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் மாண்புமிகு, H.M.M. ஹரீஸ் (பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர்) பிரதான அதிதியாக வருகை தந்து, நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்ததோடு தொடரின் ஆரம்ப போட்டியில் பங்கேற்கும் அணிகளிற்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இத்தொடரிற்கு மற்றுமொரு சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த, கஸானா ஸ்போட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் M.A.M அஸ்கர் அலி அவர்களிற்கு தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அத்துடன், இந்த T-20 தொடரின் பிரதான அமைப்பாளரான அலியார் பைஸர் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடரின் ஆரம்ப நிகழ்வோடு சேர்த்து, தொடரின் முதல் போட்டியும் இடம்பெற்றது. இத்தொடரில் பங்குபெறும் 32 அணிகளுக்கு இடையிலான முதல் சுற்றுப்போட்டிகள், சுழற்சி முறையில் அணிகளின் தேர்வுடன் மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதனையடுத்து தொடரின் அடுத்த கட்டமான காலிறுதி நொக்அவுட் சுற்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், இரண்டு அணிகளும் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி இருப்பினும் ஹொலி ஹீரோஸ் கழகம் வெற்றி பெற்றுக்கொண்டது.




















