தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இசுரு உதானவின் அதிரடிக்கு மத்தியிலும், இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை 0-2 என இழந்துள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார். இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.
முதல் T20I போட்டியில் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட இலங்கை
கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது T20I போட்டியில் இலங்கை அணி சிறப்பான பந்து
தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எய்டன் மர்க்ரம் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அந்த அணி தங்களுடைய முதல் விக்கெட்டினை 9 ஓட்டங்களுக்கு இழந்தது. எவ்வாறாயினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வென் டெர் டஸன் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.
ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்கள் மெதுவாக நகர்த்தப்பட்ட போதும், ரஸ்ஸி வென் டெர் டஸன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர், இந்த ஜோடி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்த, இருவரும் தங்களுடைய அரைச்சதங்களை கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்காக இருவரும் 116 ஓட்டங்களை குவிக்க, மாலிங்க மீண்டும் பந்து வீச வருகைத்தந்து ஹென்ரிக்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ரீஸா ஹென்ரிக்ஸ் 46 பந்துகளுக்கு 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அகில தனன்ஜய ரஸ்ஸி வென் டெர் டஸனின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு ஆறுதல் அளித்தார். ரஸ்ஸி வென் டெர் டஸன் 44 பந்துகளில் 64 ஓட்டங்களை விளாசியிருந்தார். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஜேபி டுமினி தனது பங்கிற்கு 17 பந்துகளில் 33 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து தென்னாபிரிக்க அணியின் பலமான ஓட்ட எண்ணிக்கைக்கு உதவியிருந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சை பொருத்தவரை லசித் மாலிங்க, இசுரு உதான மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டம் இன்றியும், குசல் மெண்டிஸ் 4 ஓட்டங்கள் மற்றும் கமிந்து மெண்டிஸ் தனது முதல் பந்திலும் ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை வழங்கினர். இதற்கிடையில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட நிரோஷன் டிக்வெல்ல 20 ஓட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி முதல் 6 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனைத் தொடர்ந்தும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவற, இசுரு உதான இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிக்கப்பட, தனியாளாக அதிரடியை வெளிக்காட்டிய இவர், ஆட்டமிழக்காமல் 48 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக திசர பெரேரா 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட…
Photos: Sri Lanka Vs South Africa 2nd T20I in Super Sports Park
ThePapare.com | 22/03/2019 Editing and re-using images without permission of ThePapare.com
ஒரு கட்டத்தில் 63 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி மோசமான தோல்வியை நோக்கியிருந்து. எனினும், இசுரு உதான தனது துடுப்பாட்டத்தால் அணியை படுதோல்வியிலிருந்து மீட்டிருந்தார். இவர், மொத்தமாக 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளை விளாசியிருந்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில், கிரிஸ் மொரிஸ் 3 விக்கெட்டுகளையும், டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் டேல் ஸ்டெயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதேவேளை, தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றியிருந்ததுடன், இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி ஜொஹன்னெஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க






















