தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பெனோனி வில்லோவ்மூர் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் பயிற்சிப் போட்டியில், புதிய துடுப்பாட்ட வீரர்களின் அற்புத துடுப்பாட்டம் மற்றும் லசித் மாலிங்கவின் அபார பந்து வீச்சின் உதவியுடன் இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்றுக்கொண்டது.

கௌண்டி கிரிக்கெட்டில் கால் பதிக்கும் திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத்…

இன்றைய பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் அணி 305 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெறும் 41 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெய்னர்ட் வென் டொண்டரின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும், தனியொரு ஆளாக ரெய்னர்ட் வென் டொண்டர் மாத்திரம் போராட, ஏனைய வீரர்கள் தடுமாறினர்.

அதேநேரம், இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க, தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் அணியின் இன்னிங்ஸின் பிற்பகுதி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, விக்கெட்டுகளை சரிக்க, அந்த அணி 48 ஓவர்கள் நிறைவில் 304 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரெய்னர்ட் வென் டொண்டர் 156 பந்துகளுக்கு முகங்கொடுத்து 164 ஓட்டங்களை குவித்தார். இதில் அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகளை விளாசியிருந்தார்.

Photos : Sri Lanka vs South Africa Invitation XI – Tour Match 2019

ThePapare.com | 28/02/2019 | Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement.

ரெய்னர்ட் வென் டொண்டருக்கு அடுத்தபடியாக சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை வழங்கிய மார்க்கஸ் ஆக்கர்மென் 42 ஓட்டங்களையும், லெயுஸ் டு ப்ளொய் 36 ஓட்டங்களையும், கெயல் சிம்மொன்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தனது இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய லசித் மாலிங்க 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன் மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட சற்று சவாலான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உபுல் தரங்க களமிறங்கினர். அயர்லாந்து A அணிக்கு எதிரான தொடரில் அதிரடியை காட்டிய இவர்கள், அதேபோன்ற அதிரடியை இன்றைய பயிற்சிப் போட்டியில் வெளிப்படுத்தினர்.

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக சென்று விளையாடும் அவிஷ்க பெர்னாண்டோ அதிரடியை வெளிப்படுத்தி அரைச்சதம் கடக்க, உபுல் தரங்கவும் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 127 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், உபுல் தரங்க 45(34) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரையடுத்து, இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட் 130 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. அவிஷ்க பெர்னாண்டோ 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வெளியேறினார்.

இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் மற்றும் ஓஷத பெர்னாண்டோ ஆகியோர் 110 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில், ஓஷத பெர்னாண்டோ 48 பந்துகளில் 63 ஓட்டங்களை (2 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள்) விளாசி, ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ஆடுகளத்திலிருந்து ஓய்வறை திரும்பினார். இவரை தொடர்ந்து குசல் மெண்டிஸ் 45 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிசின் துடுப்பாட்ட திறனை புகழும் ஸ்டீவ் ரிக்ஸன்

இலங்கை அணி, தென்னாபிரிக்க…

எவ்வாறாயினும், இறுதியாக ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் ப்ரியமல் பெரேரா ஆகியோர் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 41 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில், ப்ரியமல் பெரேரா 31 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் கிரோகரி மாலக்வானா 2 விக்கெட்டுகளையும், சிபனெலோ மெகான்யா ஒரு விக்கெட்டினையும் பகிர்ந்து கொண்டனர்.

இதேவேளை, ஒருநாள் தொடருக்கான பயிற்சிப்போட்டி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி ஜொஹனஸ்பேக்கில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Title

Full Scorecard

South Africa Board XI

304/10

(48 overs)

Result

Sri Lanka

307/4

(41 overs)

SL won by 6 wickets

South Africa Board XI’s Innings

BattingRB
Raynard van Tonder c V Fernando b L Malinga164156
Marques Ackerman c K Mendis b L Sandakan4250
Tshepang Dithole lbw by L Malinga01
Sibonelo Makhanya c T Perera b L Malinga01
Leus du Plooy c O Fernando b A Perera3629
Wandile Makwetu b K Rajitha15
Eathan Bosch b K Rajitha68
Kyle Simmonds b T Perera2826
Gregory Mahlokwana not out710
Thandolwethu Mnyaka b L Malinga02
Okuhle Cele lbw by L Malinga01
Extras
20 (lb 4, w 15, nb 1)
Total
304/10 (48 overs)
Fall of Wickets:
1-91 (M Ackerman, 16.3 ov), 2-91 (T Dithole, 17.1 ov), 3-91 (S Makhanya, 17.2 ov), 4-168 (du Plooy, 29.2 ov), 5-170 (W Makwetu, 30.3 ov), 6-184 (E Bosch, 32.4 ov), 7-256 (K Simmonds, 42.4 ov), 8-304 (R Tonder, 47.3 ov), 9-304 (T Mnyaka, 47.5 ov), 10-304 (O Cele, 47.6 ov)
BowlingOMRWE
Avishka Fernando60310 5.17
Kasun Rajitha60362 6.00
Thisara Perera81561 7.00
Lakshan Sandakan80651 8.13
Lasith Malinga70355 5.00
Kamindu Mendis70450 6.43
Angelo Perera50241 4.80
Oshada Fernando1080 8.00

Sri Lanka’s Innings

BattingRB
Avishka Fernando c K Simmonds b O Cele7246
Upul Tharanga c W Makwetu b O Cele4534
Kusal Mendis b S Makhanya4745
Oshada Fernando not out6348
Kamindu Mendis not out2635
Priyamal Perera not out3139
Extras
23 (b 5, lb 3, nb 1, w 14)
Total
307/4 (41 overs)
Fall of Wickets:
1-127 (WU Tharanga, 12.5 ov), 2-130 (WIA Fernando, 14.1 ov), 3-240 (BOP Fernando, 27.6 ov), 4-249 (BKG Mendis, 29.5 ov)
BowlingOMRWE
Eathan Bosch61510 8.50
Thandolwethu Mnyaka50500 10.00
Gregory Mahlokwana70560 8.00
Okuhle Cele60372 6.17
Kyle Simmonds100620 6.20
Sibonelo Makhanya60351 5.83
Leus du Plooy1080 8.00

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<