Home Tamil அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இலங்கை A

அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இலங்கை A

163

சுற்றுலா தென்னாபிரிக்கா A மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான உத்தியோகபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை A கிரிக்கெட் அணி 160 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>தென்னாபிரிக்க A அணியை சுருட்டிய இலங்கையின் பந்துவீச்சாளர்கள்<<

இலங்கை A மற்றும் தென்னாபிரிக்க A அணிகள் இடையிலான முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது. நான்கு நாட்கள் கொண்ட இப்போட்டியின் முதல் இரண்டு நாட்களும் நேற்று (13) நிறைவடைந்திருக்க இலங்கை A அணி தமது முதல் இன்னிங்ஸை 325 ஓட்டங்களுடனும், தென்னாபிரிக்கா A தமது முதல் இன்னிங்ஸை 131 ஓட்டங்களுடனும் நிறைவு செய்திருந்தன.

இதன் பின்னர் இன்று (14) போட்டியின் மூன்றாம் நாளில் தென்னாபிரிக்கா A அணியை விட 194 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணி தென்னாபிரிக்க வீரர் சேனுரன் முத்துசாமியின் சுழல்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாம் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களையே எடுத்தது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் மெண்டிஸ் 46 ஓட்டங்களை எடுக்க, தென்னாபிரிக்க A அணியின் பந்துவீச்சில் சேனுரன் முத்துசாமி 5 விக்கெட்டுக்களையும், லிஸாட் வில்லியம்ஸ் மற்றும் கெரால்ட் கொயெட்ஸீ ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் இலங்கை A அணியின் இரண்டாம் இன்னிங்ஸின் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 346 ஓட்டங்கள் தென்னாபிரிக்க A அணி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸிஸ் துடுப்பாடிய தென்னாபிரிக்க A அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 185 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

தென்னாபிரிக்க A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சேனுரன் முத்துசாமி மற்றும் கீகன் பீடர்சென் ஆகியோர் தலா 29 ஓட்டங்கள் வீதம் குவித்திருந்தனர்.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் லக்ஷித மானசிங்க, லசித் எம்புல்தெனிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். அதன்படி இலங்கை  A அணியின் வெற்றிக்காக ரமேஷ் மெண்டிஸ் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார்.

>>முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி<<

மேலும் இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை A அணி இரு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்து கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka A Team
325/10 (83) & 151/10 (38.4)

South Africa A Team
131/10 (40) & 185/10 (50)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle lbw b Senuran Muthusamy 98 119 11 4 82.35
Lahiru Udara c Jordan Hermann b Kwena Maphaka 42 61 7 0 68.85
Nuwanidu Fernando c Tristan Stubbs b Senuran Muthusamy 10 32 1 0 31.25
Kamindu Mendis c Sinethemba Qeshile b Senuran Muthusamy 28 41 2 1 68.29
Nipun Dhananjaya c Keegan Petersen b Tristan Stubbs 13 25 1 0 52.00
Janith Liyanage  lbw b Senuran Muthusamy 1 8 0 0 12.50
Lakshitha Manasinghe b Kwena Maphaka 4 33 0 0 12.12
Ramesh Mendis lbw b Senuran Muthusamy 78 89 12 0 87.64
Lasith Embuldeniya lbw b Senuran Muthusamy 15 38 2 0 39.47
Milan Rathnayake not out 23 44 3 0 52.27
Dilshan Madushanka c Kwena Maphaka b Senuran Muthusamy 4 9 1 0 44.44


Extras 9 (b 3 , lb 4 , nb 1, w 1, pen 0)
Total 325/10 (83 Overs, RR: 3.92)
Fall of Wickets 1-66 (16.3) Lahiru Udara, 2-106 (28.4) Nuwanidu Fernando, 3-154 (38.2) Kamindu Mendis, 4-189 (45.3) Nipun Dhananjaya, 5-197 (46.4) Lasith Croospulle, 6-198 (48.6) Janith Liyanage , 7-217 (56.5) Lakshitha Manasinghe, 8-272 (68.6) Lasith Embuldeniya, 9-319 (80.4) Ramesh Mendis, 10-325 (82.6) Dilshan Madushanka,

Bowling O M R W Econ
Lizaad Williams 11 2 45 0 4.09
Gerald Coetzee 12 4 28 0 2.33
Kwena Maphaka 11 3 43 2 3.91
Senuran Muthusamy 31 4 122 7 3.94
Dewald Brevis 7 0 31 0 4.43
Tristan Stubbs 11 0 49 1 4.45
Batsmen R B 4s 6s SR
Jordan Hermann b Dilshan Madushanka 0 2 0 0 0.00
Tony de Zorzi c Kamindu Mendis b Lasith Embuldeniya 9 24 1 0 37.50
Matthew Breetzke not out 59 93 5 0 63.44
Keegan Petersen c Nipun Dhananjaya b Dilshan Madushanka 19 42 2 0 45.24
Tristan Stubbs c Lahiru Udara b Dilshan Madushanka 0 3 0 0 0.00
Sinethemba Qeshile lbw b Lasith Embuldeniya 4 2 1 0 200.00
Dewald Brevis lbw b Lakshitha Manasinghe 16 23 2 0 69.57
Senuran Muthusamy c Kamindu Mendis b Lakshitha Manasinghe 7 17 0 0 41.18
Gerald Coetzee b Lakshitha Manasinghe 4 12 0 0 33.33
Lizaad Williams c Kamindu Mendis b Lakshitha Manasinghe 4 9 1 0 44.44
Kwena Maphaka st Lahiru Udara b Lakshitha Manasinghe 4 13 1 0 30.77


Extras 5 (b 3 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 131/10 (40 Overs, RR: 3.27)
Fall of Wickets 1-0 (0.2) Jordan Hermann, 2-22 (7.2) Tony de Zorzi, 3-57 (18.3) Keegan Petersen, 4-57 (18.6) Tristan Stubbs, 5-66 (19.6) Sinethemba Qeshile, 6-93 (25.6) Dewald Brevis, 7-109 (31.4) Senuran Muthusamy, 8-125 (37.3) Lizaad Williams, 9-131 (39.6) Kwena Maphaka, 10-119 (3502) Gerald Coetzee,

Bowling O M R W Econ
Dilshan Madushanka 9 2 31 3 3.44
Milan Rathnayake 4 0 16 0 4.00
Lasith Embuldeniya 17 0 61 2 3.59
Lakshitha Manasinghe 10 0 19 5 1.90
Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle c Tony de Zorzi b Lizaad Williams 2 5 0 0 40.00
Lahiru Udara lbw b Senuran Muthusamy 9 24 1 0 37.50
Nuwanidu Fernando b Senuran Muthusamy 5 11 1 0 45.45
Kamindu Mendis lbw b Senuran Muthusamy 35 50 4 0 70.00
Nipun Dhananjaya c Sinethemba Qeshile b Kwena Maphaka 11 25 1 0 44.00
Janith Liyanage  b Senuran Muthusamy 2 9 0 0 22.22
Ramesh Mendis c & b Senuran Muthusamy 46 63 5 2 73.02
Lakshitha Manasinghe c Matthew Breetzke b Lizaad Williams 4 9 1 0 44.44
Lasith Embuldeniya c Sinethemba Qeshile b Gerald Coetzee 10 20 1 1 50.00
Milan Rathnayake c Sinethemba Qeshile b Gerald Coetzee 7 17 0 1 41.18
Dilshan Madushanka not out 0 0 0 0 0.00


Extras 20 (b 17 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 151/10 (38.4 Overs, RR: 3.91)
Bowling O M R W Econ
Lizaad Williams 7 0 16 2 2.29
Gerald Coetzee 8 3 31 2 3.88
Senuran Muthusamy 16.4 3 53 5 3.23
Kwena Maphaka 6 2 27 1 4.50
Tony de Zorzi 1 0 6 0 6.00


Batsmen R B 4s 6s SR
Tony de Zorzi lbw b Dilshan Madushanka 11 11 2 0 100.00
Jordan Hermann c Lakshitha Manasinghe b Lasith Embuldeniya 16 31 3 0 51.61
Matthew Breetzke lbw b Milan Rathnayake 14 17 2 0 82.35
Keegan Petersen c Janith Liyanage  b Ramesh Mendis 29 88 2 0 32.95
Senuran Muthusamy c Nuwanidu Fernando b Lakshitha Manasinghe 29 38 3 0 76.32
Sinethemba Qeshile run out (Ramesh Mendis) 23 43 4 0 53.49
Dewald Brevis c Lakshitha Manasinghe b Lasith Embuldeniya 20 33 3 0 60.61
Gerald Coetzee b Lakshitha Manasinghe 12 34 3 0 35.29
Lizaad Williams not out 19 27 1 0 70.37
Kwena Maphaka c Lakshitha Manasinghe b Ramesh Mendis 0 10 3 0 0.00
Tristan Stubbs retired 0 0 0 0 0.00


Extras 12 (b 4 , lb 4 , nb 2, w 2, pen 0)
Total 185/10 (50 Overs, RR: 3.7)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 6 0 34 1 5.67
Lakshitha Manasinghe 10 2 36 2 3.60
Milan Rathnayake 7 0 21 1 3.00
Lasith Embuldeniya 13 1 36 2 2.77
Ramesh Mendis 14 2 50 2 3.57



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<