Home Tamil இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு வெற்றி

1314

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகள் இடையே நடைபெற்ற மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

2022இன் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாபர் அசாம்

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இங்கே விளையாட முன்னர் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் ஆடுகின்றது.

அதன்படி கடந்த புதன்கிழமை (25) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இந்தப் பயிற்சிப் போட்டி ஆரம்பித்ததோடு, நேற்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியை விட 222 ஓட்டங்களால் முன்னிலை பெற்றவாறு காணப்பட்ட இங்கிலாந்து லயன்ஸ் அணி 164 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஜேய் ஹேய்னஸ் 13 ஓட்டங்களுடனும், ஜோஸ் பொஹன்னன் 04 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இன்று போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டநாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 250 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து லயன்ஸ் அணி துடுப்பாட்டத்தில் ஜேக் ஹேய்னஸ் அரைச்சதம் தாண்டி 51 ஓட்டங்கள் எடுக்க, ஜோஸ் பொஹன்னன் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி பந்துவீச்சில் இஷித விஜேசுந்தர, சஹான் ஆராச்சிகே மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு 308 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்காக ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த லசித் குரூஸ்புள்ளே அதிரடி அரைச்சதம் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார்.

அவரின் பின்னர் பசிந்து சூரியபண்டார, ஜனித் லியனகே ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி போட்டியின் வெற்றி இலக்கை 50.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி துடுப்பாட்டத்தில் லசித் குரூஸ்புள்ளே 84 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 14 பெளண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அரைச்சதம் விளாசிய பசிந்து சூரியபண்டார 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் உடன் 52 ஓட்டங்கள் எடுத்தார். இதேவேளை ஜனித் லியனகே 42 ஓட்டங்களுடன் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார்.

மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சில் ஜேக் கார்ஸன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அவரது பந்துவீச்சு வீணானது.

இனி இங்கிலாந்து லயன்ஸ் இலங்கை A கிரிக்கெட் அணியுடன் ஆடும் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka Board President’s XI
355/9 (72) & 309/6 (50.4)

England Lions
413/8 (67) & 250/10 (47.4)

Batsmen R B 4s 6s SR
Alex Lees st Lahiru Udara b Tharindu Ratnayake 103 97 12 2 106.19
Haseeb Hameed c Dushan Hemantha b Kavindu Pathirathna 0 1 0 0 0.00
Tom Haines lbw b Kavindu Pathirathna 6 5 1 0 120.00
Tom Abell b Tharindu Ratnayake 57 58 11 0 98.28
Josh Bohannon b Nimesh Vimukthi 58 75 7 0 77.33
Lyndon James lbw b Nimesh Vimukthi 24 44 2 0 54.55
Jack Haynes not out 63 56 4 1 112.50
Jamie Smith c Lahiru Udara b Kavindu Nadeeshan 50 34 7 1 147.06
Ollie Robinson b Tharindu Ratnayake 25 24 1 0 104.17


Extras 27 (b 4 , lb 10 , nb 12, w 1, pen 0)
Total 413/8 (67 Overs, RR: 6.16)
Bowling O M R W Econ
Kavindu Pathirathna 7 0 40 2 5.71
Isitha Wijesundera 7 2 14 1 2.00
Nimsara Atharagalla 1.3 0 13 0 10.00
Nimesh Vimukthi 9 0 59 0 6.56
Kalana Perera 7.3 0 30 0 4.11
Sahan Arachchige 2 0 31 0 15.50
Tharindu Ratnayake 15 0 85 2 5.67
Janith Liyanage  8 0 47 2 5.88
Dushan Hemantha 7 0 62 0 8.86
Kavindu Nadeeshan 3 0 18 1 6.00
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka retired 150 158 24 1 94.94
Lasith Croospulle c Jack Carson b Liam Patterson-White 19 36 2 0 52.78
Nimesh Vimukthi b Jack Carson 17 28 2 1 60.71
Lahiru Udara c Nathan Gilchrist b Jack Carson 93 85 13 2 109.41
Sahan Arachchige c Tom Haines b Liam Patterson-White 25 51 4 0 49.02
Dunith wellalage b Josh Tongue 13 25 3 0 52.00
Janith Liyanage  lbw b Josh Tongue 0 2 0 0 0.00
Pasindu Sooriyabandara lbw b Liam Patterson-White 1 6 0 0 16.67
Avishka Tharindu b Josh Tongue 6 8 1 0 75.00
Nimsara Atharagalla not out 6 24 1 0 25.00
Kavindu Pathirathna not out 4 17 1 0 23.53


Extras 21 (b 8 , lb 0 , nb 8, w 5, pen 0)
Total 355/9 (72 Overs, RR: 4.93)
Bowling O M R W Econ
Sam Cook 11 0 52 0 4.73
Matt Fisher 9.4 2 28 0 2.98
Liam Patterson-White 16 4 80 3 5.00
Jack Carson 14 1 73 2 5.21
Tom Hartley 8 2 40 0 5.00
Josh Tongue 8 2 22 3 2.75
Nathan Gilchrist 5 2 48 0 9.60
Tom Abell 0.2 0 4 0 20.00
Batsmen R B 4s 6s SR
AZ Lees retired 27 22 3 0 122.73
Haseeb Hameed c Isitha Wijesundera b Kavindu Pathirathna 2 10 0 0 20.00
Tom Haines b Sahan Arachchige 13 30 1 0 43.33
Lyndon James b Sahan Arachchige 17 22 2 0 77.27
Liam Patterson-White c & b Nimesh Vimukthi 26 34 3 1 76.47
Ollie Robinson c Isitha Wijesundera b Janith Liyanage  39 25 6 0 156.00
Jamie Smith b Nimesh Vimukthi 13 8 2 0 162.50
Jack Haynes c Dushan Hemantha b Isitha Wijesundera 51 70 5 0 72.86
Tom Abell c Sahan Arachchige b Dushan Hemantha 0 2 0 0 0.00
Josh Bohannon c Lasith Croospulle b Isitha Wijesundera 50 64 4 0 78.12
Tom Hartley not out 1 1 0 0 100.00


Extras 11 (b 2 , lb 5 , nb 3, w 1, pen 0)
Total 250/10 (47.4 Overs, RR: 5.24)
Bowling O M R W Econ
Kavindu Pathirathna 8 0 45 1 5.62
Isitha Wijesundera 4.4 0 16 2 3.64
Sahan Arachchige 7 0 50 2 7.14
Kalana Perera 3 0 10 0 3.33
Janith Liyanage  8 0 45 1 5.62
Nimesh Vimukthi 11 0 46 2 4.18
Dushan Hemantha 5 0 16 1 3.20
Tharindu Ratnayake 1 0 15 0 15.00


Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle b Tom Hartley 116 84 15 5 138.10
Lahiru Udara b Sam Cook 25 22 4 1 113.64
Avishka Tharindu c Jack Carson b Liam Patterson-White 0 10 0 0 0.00
Sahan Arachchige c & b Jack Carson 22 46 3 0 47.83
Janith Liyanage  c Jack Haynes b Josh Tongue 42 59 7 0 71.19
Dunith wellalage c Sam Cook b Jack Carson 19 35 2 1 54.29
Pasindu Sooriyabandara not out 52 38 7 2 136.84
Dushan Hemantha not out 23 14 2 1 164.29


Extras 10 (b 0 , lb 4 , nb 4, w 2, pen 0)
Total 309/6 (50.4 Overs, RR: 6.1)
Bowling O M R W Econ
Sam Cook 12 2 61 1 5.08
Josh Tongue 9 2 46 1 5.11
Liam Patterson-White 9 1 55 1 6.11
Jack Carson 11 2 72 2 6.55
Tom Hartley 7.4 0 60 1 8.11
Nathan Gilchrist 2 0 11 0 5.50



>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<