அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் முக்கியமான போட்டித் தொடர்களின் போது உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதேபோன்று இலங்கை அணி வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் பல்வேறு குறைபாடுகளும் அவ்வப்போது காணக்கூடியதாக இருந்தது.
[rev_slider LOLC]
அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க
பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே..
அத்துடன், இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு வீரர்களின் உபாதைகளும் முக்கிய காரணமாக அமைந்திருந்தன. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதியை அதிகரிக்கும் நோக்கிலும், தொடர் உபாதைகளிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் நோக்கிலும் சசெக்ஸ் கிரிக்கெட் கழகத்தின் உடற்தகுதி மற்றும் மறுசீரமைப்பு ஆலோசகரான இங்கிலாந்து நாட்டவரான ரொப் சேவ்வின் சேவையை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட்டுக்காக விளையாடி வருகின்ற முதல்தர மற்றும் வளர்ந்துவரும் வீரர்களை உபாதைகளில் இருந்து பாதுகாத்து அதற்குத் தேவையான உடற்தகுதியினை முன்னெடுத்துடுச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த வீரர்களையும் தெளிவுபடுத்துவதற்கான வேவைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்தின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் முகாமையாளர் ரொப் சேவ் தெரிவித்தார்.
பாக். சுப்பர் லீக்கில் இணையும் திசர பெரேரா, அசேல குணரத்ன
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால்…
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
”உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு பொருத்தமான உடற்பயிற்சி மற்றும் ஊட்டசத்துக்களை வீரர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அத்துடன், மைதானத்தில் வீரர்கள் உற்காசத்துடன் திறமையினை வெளிப்படுத்துவதற்கு தேவையான சக்தியினை வழங்கவும், நீண்ட நேரம் களத்தப்பு மற்றும் துடுப்பாட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற கலைப்பை தவிர்ப்பதற்கும் இவ்வாறான உடற்பயிற்சி மற்றம் ஊட்டசத்துக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர்கள் ஒர் அணியாக மாத்திரமல்லாது தனிப்பட்ட முறையில் தமது உடற்தகுதியில் பரிபூரணமிக்கவராகவும் இருப்பதற்கான நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். இதற்காக ஒருசில உள்நாட்டு உணவு வகைகளை உட்கொள்வதால் காபோவைதரேட், புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை வீரர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளர்களுக்கான கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட செயலமர்வுக்கு அதன் பிரதானி ஹேஷான் த மெல், சமில கமகே மற்றும் சானக தீகொடகமகே மற்றும் உயர் தொழில்நுட்ப பிரிவின் பிரதானி சைமன் விலிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




















