பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட பானுக்க ராஜபக்ஷ

61

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரின் ஏழாம் நாளுக்குரிய போட்டிகள் 6 இன்று (15) நிறைவுக்கு வந்தன. 

இன்று இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது இடம்பெற்ற T20 போட்டிகளில் பங்கேற்றிருந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். 

இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் டொம் மூடி

இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட ஆலோசகராக அவுஸ்திரேலியாவின் டொம்…

இலங்கை கிரிக்கெட் அணி, அண்மையில் இனங்கண்டிருக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பானுக்க ராஜபக்ஷ சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். BRC அணிக்காக விளையாடிய பானுக்க ராஜபக்ஷ பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, துடுப்பாட்டத்தில் பெறுமதியான 30 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். ராஜபக்ஷவின் சகலதுறை ஆட்டத்தோடு BRC அணி, கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்தது.

அதேநேரம், இலங்கை அணியின் மற்றுமொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து கோல்ட்ஸ் அணிக்காக அரைச்சதம் (50) பெற்றார். அவரோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் ஏனைய வீரரான சதீர சமரவிக்ரமவும் அரைச்சதம் (50) பெற கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்ட இன்னிங்ஸில் 206 ஓட்டங்கள் குவித்து, காலி கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 100 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்தது. 

துடுப்பாட்ட வீரர்கள் தவிர மணிக்கட்டு சுழல் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க, அமில அபொன்சோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது திறமையினை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாமர சில்வா

இலங்கை கிரிக்கெட் அணி உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரில்…

ஏழாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் எதிர் பாணதுறை விளையாட்டுக் கழகம்

FTZ மைதானம், கட்டுநாயக்க

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் – 102/8 (20) ஹசித நிர்மல் 53*, கெளமல் நாணயக்கார 3/12, உமேஷ் கருணாரத்ன 2/12, அஷார் அத்தாரி 2/24

பாணதுறை விளையாட்டுக் கழகம் – 106/7 (19) உமேஷ் கருணாரத்ன 32, நுவான் சானக்க 3/09

முடிவு – பாணதுறை கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

FTZ மைதானம், கட்டுநாயக்க

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 207/6 (20) திலகரட்ன சம்பத் 79, யசோத லங்கா 51, திலிப ஜயலத் 2/22, மிஷென் சில்வா

புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் – 106 (15.3) நிப்புன கமகே 21, லஹிரு சமரக்கோன் 3/19, மலித் டி சில்வா 2/34, அலங்கார அசங்க 2/07, துஷான் ஹேரத் 2/10

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 101 ஓட்டங்களால் வெற்றி

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

BRC மைதானம், கொழும்பு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 206/7 (20) விஷாத் ரன்திக்க 51*, அவிஷ்க பெர்னாந்து 50, சதீர சமரவிக்ரம 50, சரங்க ராஜகுரு 3/29

காலி கிரிக்கெட் கழகம் – 106/8 (20) சத்துர லக்ஷான் 31*, நிப்புன் ரன்சிக்க 3/13, பிரபாத் ஜயசூரிய 2/21

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 100 ஓட்டங்களால் வெற்றி

Photos: Galle CC vs Colts CC | SLC Invitation T20 Tournament 2019/20

குழு D

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

பி. சரவணமுத்து மைதானம், கொழும்பு

றாகம கிரிக்கெட் கழகம் – 123/7 (20) ஜனித் லியனகே 31*, வனிது ஹஸரங்க 2/16, நுவான் துஷார 2/16

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 92 (18.3) சாலிக்க கருணாநாயக்க 23, பினுர பெர்னாந்து 2/11, நிஷான் பீரிஸ் 2/12, அமில அபொன்சோ 2/19

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 31 ஓட்டங்களால் வெற்றி

Photos: Ragama CC Vs CCC | SLC Invitation T20 Tournament 2019/20

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் BRC

பி.சரவணமுத்து மைதானம், கொழும்பு

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 123/8 (20) புத்திக்க பிரசாத் 30, பானுக்க ராஜபக்ஷ 3/11, சொய்புல்லா 2/11, துவிந்து திலகரட்ன 2/15

BRC – 124/4 (17.4) நிசால் பிரான்சிஸ்கோ 34, பானுக்க ராஜபக்ஷ 30, நிமன்க ரத்நாயக்க 2/25

முடிவு – BRC 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட கிரிக்கெட் கழகம்

BRC மைதானம், கொழும்பு

இலங்கை துறைமுக அதிகார சபை – 188/5 (20) கயான் மனீஷன் 78*, அதீஷ நாணயக்கார 52, சானுக்க டில்சான் 2/24

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 162/9 (20) நிமன்த குணசிரி 52, தெனுவன் ராஜகுர்ன 49, ரஜீவ வீரசிங்க 3/33, சுப்புன் கவிந்த 2/30

முடிவு – இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் 26 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<