ரோஹித்திற்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் தலைவராக சுப்மான் கில்

11
Rohit Sharma as Indias ODI captain

இந்திய ஒருநாள் அணியின் புதிய தலைவராக சுப்மான் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய டெஸ்ட் மற்றும் T20I அணிகளை வழிநடாத்திய சுப்மான் கில் இதன் மூலம் முதல் தடவையாக அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில், இந்திய ஒருநாள் அணியினையும் வழிநடாத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

>>ஆப்கானிஸ்தான் தொடருக்கான பங்களாதேஷ் ஒருநாள் குழாம் அறிவிப்பு<<

2027ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தினை இலக்கு வைத்தே இந்திய ஒருநாள் தலைவர் பதவியில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் புதிய அணித்தலைவர் அறிவிப்போடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் பங்கெடுக்கும் இந்திய வீரர்கள் குழாத்தினையும் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒக்டோபர் 19 தொடக்கம் 25 வரையும், ஐந்து போட்டிகள் T20I தொடர் ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 8 வரையும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய ஒருநாள் குழாம்

சுப்மான் கில் (தலைவர்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் (பிரதி தலைவர்), அக்ஷார் பட்டேல், கே.எல். ராகுல் (விக்கெட்காப்பாளர்), நிதீஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமட் சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்திய T20I குழாம்

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), அபிஷேக் சர்மா, சுப்மான் கில் (பிரதி தலைவர்), திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, சிவம் டூபே, அக்ஷார் பட்டேல், ஜிதேஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வொஷிங்டன் சுந்தர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<