டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் விளையாடவுள்ள சஹீன் அப்ரிடி

ILT20 2023

330

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ILT20 தொடரின் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த முதலாவது பருவகாலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எவரும் விளையாடாத நிலையில், முதல் பாகிஸ்தான் வீரராக அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தொடருக்காக சஹீன் ஷா அப்ரிடி இணைக்கப்பட்டுள்ளார்.

>> இறுதி ஓவர் வரை போராடி வெற்றியினைப் பதிவு செய்த கொழும்பு

சஹீன் ஷா அப்ரிடி அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்த தொடருக்காக மாத்திரமின்றி அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் அசாம் கான் ILT20 தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதும், அந்நாட்டு கிரிக்கெட் சபை விளையாடுவதற்கான அனுமதிய அவருக்கு வழங்கவில்லை. எனினும், இம்முறை பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் சஹீன் ஷா அப்ரிடி இணைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு விளையாடியிருந்த கொலின் மன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ்  மற்றும் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால், வனிந்து ஹஸரங்க மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் முன்னணி வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<