இலங்கை 19 வயதுக்குட்பட்ட ஆடவர் கிரிக்கெட் அணி இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் 24ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஏழு போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம் மற்றும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
>>செப்டம்பரில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய U19 மகளிர் கிரிக்கெட் அணி<<
இதன்படி, ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதலாவது ஒருநாள் போட்டி கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்திலும், அடுத்த மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் செப்டெம்பர் 2, 4 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரின் கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 9, 12 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறும்.
போட்டி அட்டவணை
ஆகஸ்ட் 30 – முதல் இளையோர் ஒருநாள் போட்டி – கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்
செப்டம்பர் 02 – இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டி – கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்
செப்டம்பர் 04 – மூன்றாவது இளையோர் ஒருநாள் போட்டி – கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்
செப்டம்பர் 07 – நான்காவது இளையோர் ஒருநாள் போட்டி – கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்
செப்டம்பர் 09 – ஐந்தாவது இளையோர் ஒருநாள் போட்டி – சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
செப்டம்பர் 12 – ஆறாவது இளையோர் ஒருநாள் போட்டி – சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
செப்டம்பர் 15 – ஏழாவது இளையோர் ஒருநாள் போட்டி – சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<