20 பந்துகளில் சதமடித்து இந்திய வீரர் சஹா புதிய சாதனை

452
Saha smashed 14 sixes and four fours to remain unbeaten on 102 that came off just 20 balls. © BCCI

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமன் சஹா, உள்ளூர் T-20 போட்டியொன்றில் 20 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதில் 16 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கும்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் கொல்கத்தாவின் ஜே.சி முகர்ஜி கிண்ண T-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காலிகட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ்மோகன் பகன் அணிகள் மோதின.

இலங்கை மகளிர் அணிக்கு மீண்டும் ‘வைட்வொஷ்’ தோல்வி

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான…

முதலில் களமிறங்கிய பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மோகன் பகன் அணியின் விருத்திமான் சஹா, சுபோமோய் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சஹா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மோகன் பகன் அணி 7 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 154 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் சஹா 20 பந்துகளை சந்தித்து 14 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 102 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் T-20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இதில் 12 பந்தில் 4 பௌண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் அரைச்சதம் கடந்த சஹா, அடுத்த 8 பந்தில் சதத்தை(102) எட்டினார்.

இதில் 510 என்ற ஓட்ட வேகத்துடன் சிக்ஸர் மூலம் 84 ஓட்டங்களையும், பௌண்டரிகள் மூலம் 16 ஓட்டங்களையும், இரண்டு ஒரு ஓட்டங்களையும் சஹா பெற்றிருந்ததுடன், ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களையும் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை .பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சஹாவை 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு ஒருசில வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்த சாதனை சஹாவிற்கு நம்பிக்கையூட்டிள்ளது.

கடைசி அணியாக உலகக் கிண்ணத்திற்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்

உலகக் கிண்ண தகுதிகாண்…

குறித்த போட்டியின் பிறகு சஹா கருத்து வெளியிடுகையில், ‘முதல் பந்திலிருந்தே நன்றாக மிடில் செய்ய முடியும் என்று உணர்ந்தேன். அப்படியே செய்தேன். இது சாதனையா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. .பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நான் இங்கு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். T-20 போட்டியைப் பொறுத்தவரையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கவே விரும்புகிறேன். எனவே, வாய்ப்பு கிடைக்கும் போது தொடர்ந்து சிறப்பாமாக விளையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 33 வயதான சஹா, .பி.எல் தொடரில் சென்னை, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடி, 107 T-20 போட்டிகளில் 1,557 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கு மாத்திரம் முத்திரைக் குத்தப்பட்ட விருத்திமன் சஹா, 2014 .பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக பெங்களூரில் அதிரடி சதம் அடித்து, .பி.எல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

எனினும், T-20 கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் .பி.எல் கிரிக்கெட்டில் 30 பந்துகளில் சதம் அடித்து கிறிஸ் கெய்ல் அதிகாரபூர்வ தொடரில் T-20 சாதனையை தன் வசம் வைத்துள்ளார். தற்போது இந்திய உள்ளூர் போட்டிகளில் அதிவேக சதத்தை சஹா நிகழ்த்தியுள்ளார். முன்னதாக 2016இல் இந்தியாவின் டுபாகோ கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட T-20 தொடரில், ஈராக் தோமஸ் 21 பந்தில் சதமடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.