மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரரான ரொஸ்டன் சேஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளின் தலைவராக செயற்பட்டு வந்த கிரைக் ப்ராத்வைட் மார்ச் மாதம் தனது பதவியினை இராஜினமா செய்த நிலையில், 33 வயது நிரம்பிய ரொஸ்டன் சேஸிற்கு புதிய தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.
>>இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்<<
33 வயது நிரம்பிய ரொஸ்டன் தான் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேற்கிந்திய தீவுகளை அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடர் புதிய ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஜோமல் வோர்ரிகன் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் பிரதி தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
இறுதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னரே மேற்கிந்திய தீவுகளை டெஸ்ட் போட்டியொன்றில் பிரதிநிதித்துவம் செய்த ரொஸ்டன் சேஸ் இதுவரை மொத்தமாக 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு 26.33 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 5 சதங்கள் அடங்கலாக 2265 ஓட்டங்கள் குவித்திருப்பதோடு, 85 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<