டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த ரோஹிட் சர்மா

25
rohit-sharma

இந்திய டெஸ்ட் அணியின் தலைவரும் அதன் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ரோஹிட் சர்மா உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்

ஏற்கனவே T20I போட்டிகளில் ஓய்வினை அறிவித்த ரோஹிட் சர்மா தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே அவர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக தீடிர் அறிவிப்பினை தனது சமூக வலைதள கணக்கின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

”நான் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதினை உறுதிப்படுத்துகின்றேன். இந்திய அணியினை வெண்ணிற உடையில் பிரதிநிதித்துவம் செய்ததனை கௌரவமாக கருதுகின்றேன். நீங்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, நான் தொடர்ந்தும் இந்தியாவினை ஒருநாள் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்வேன்.” என்று தனது ஓய்வு தொடர்பில் ரோஹிட் சர்மா குறிப்பிட்ட சமூக வலைதள கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 11 ஆண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியினை பிரதிநிதித்துவம் செய்துள்ள ரோஹிட் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, அதில் இந்திய அணியினை 24 போட்டிகளில் வழிநடாத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்மா மொத்தம் 12 சதங்கள் அடங்கலாக 4302 ஓட்டங்களை (சராசரி 40.58) குவித்திருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கும் நிலையில் அதற்கு முன்னர், டெஸ்ட் போட்டிகளில் புதிய தலைவர் ஒருவரினை தீர்மானிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<