இலங்கையுடன் ஆப்கானிஸ்தான் A த்ரில் வெற்றி

Rising Stars Asia Cup 2025

117
Rising Stars Asia Cup 2025 - Sri Lanka A vs Afghanistan A

2025ஆம் ஆண்டுக்கான ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கிண்ண T20 தொடரின் நான்காவது குழுநிலைப் போட்டியில், இன்று (15) இலங்கை A கிரிக்கெட் அணியை ஆப்கானிஸ்தான் A அணி 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

>>IPL 2026 Retentions – Full List of Released and Retained Players<<

இறுதி ஓவர் வரை சென்ற பரபரப்பான இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கட்டார் டோஹாவின் வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, குழு A இணைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானுக்கும், இலங்கைக்கும் தொடரில் முதல் போட்டியானது.

நாணயச் சுழற்சியில் வென்ற துனித் வெல்லாலகே தலைமையிலான இலங்கை A அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை  வீரர்கள், 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தனர்.

 இலங்கை துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் சொதப்பிய போதும் பின்வரிசையில் களம் வந்த மிலான் ரத்நாயக்க வெறும் 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்தார். இது இலங்கை A சார்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக மாறியது.

ஆப்கான் பந்துவீச்சில் பிலால் ஷமி 4 விக்கெட்களையும், அல்லா கசான்பார் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 171 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை ஆப்கானிஸ்தான் A அணிக்கு நிர்ணயிக்கப்பட இந்த இலக்கை நோக்கி ஆடிய

ஆப்கானிஸ்தான், ஆரம்பத்தில் தடுமாறினாலும், முக்கியமான வீரர்களின் பங்களிப்பால் வெற்றியை நோக்கி முன்னேறியது. இறுதி வரை இறுக்கம் காணப்பட்ட இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் A  19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.

ஆப்கான் A அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் செடிக்குல்லா அட்டால் 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுக்களை சுருட்டிய போதும் அது வீணானது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<