ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக முதல் டெஸ்டில் யார்? கம்பீர் விளக்கம்

51
ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக முதல் டெஸ்டில் யார்? கம்பீர் விளக்கம்

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹிட் சர்மா ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

>>அசத்தல் பந்துவீச்சோடு T20i தொடரினை சமன் செய்த நியூசிலாந்து<<

இந்திய டெஸ்ட் அணியின் தலைவரான ரோஹிட் சர்மா சொந்தக் காரணங்கள் கருதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகிக்கப்படும் நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராக கே.எல். ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரான கௌதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வீரர்களும் இந்திய A அணிக்காக ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் முதல்தரப் போட்டித் தொடரில் பங்கேற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்திய டெஸ்ட் அணியின் பிரதி தலைவராக காணப்படும் ஜஸ்பிரிட் பும்ரா, ரோஹிட் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணியினை வழிநடாத்துவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் 22ஆம் திகதி பேர்த்தில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<