கட்டாரில் ஆரம்பமாகவுள்ள புதிய T10 தொடர்!

181
ICC

கட்டார் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள T10  தொடர் எதிர்வரும் மாதம் 7ம் திகதி முதல் 16ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய பரிணாமமான T10 தொடர் தற்போது அதிகம் விரும்பப்படும் போட்டித் தொடரில் ஒன்றாக மாறியுள்ளது. குறித்த இந்த T10 வடிவிலான போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன், இலங்கை டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட …

இந்தநிலையில், கட்டார் கிரிக்கெட் சங்கம் தங்களுடைய முதல் சர்வதேச அளவிலான தொடராக கட்டார் T10 தொடரை நடத்த தீர்மானித்துள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கட்டார் T10 தொடரில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. தொடரில் 36 சர்வதேச வீரர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், தொடரில் 12 இணை அங்கத்துவ நாடுகளின் வீரர்கள் மற்றும் கட்டார் கிரிக்கெட் கழக வீரர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

கட்டார் T10 தொடர் குறித்து கட்டார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் யூசுப் ஜே அல் குவாரி குறிப்பிடுகையில் “ சர்வதே அளவில் பிரசித்திபெற்றுள்ள T10 தொடரை நடத்துவதற்கான வாய்ப்பை ஐசிசி எமக்கு வழங்கியமைக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், பெருமையும் அடைகிறோம். இந்த தொடரை நடத்துவதன் மூலம் எமது நாட்டில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க முடியும் என நம்புகிறோம்” என்றார்.

போட்டிகள் அனைத்தும் ஏஷியன் டவுன் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. அத்துடன், போட்டித் தொடருக்கான அனைத்து விளம்பர தாரர்களை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கண்டறிந்துள்ளதாகவும் கட்டார் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை  போட்டி தொடருக்கான அணி விபரங்கள், வீரர்கள் மற்றும் போட்டி அட்டவணைகளை கட்டார் கிரிக்கெட் சங்கம் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…