இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக மீண்டும் பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>இந்திய T2I0 தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
இரண்டு வருடங்கள் கொண்ட உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய தேர்வுக் குழாத்தின் பதவிக் காலம் நிறைவடைந்ததனை அடுத்தே பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான குழு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக்குழு இதற்கு முன்னர் 2021 தொடக்கம் 2023 வரையிலான காலப்பகுதியில் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக செயற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதேநேரம் புதிய தேர்வுக் குழுவில் விக்ரமசிங்க தவிர உறுப்பினர்களாக தரங்க பரணவிதான, இன்டிக்க டி சேரம், வினோதன் ஜோன் மற்றும் ரசாஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதில் தரங்க பரணவிதான மற்றும் இன்டிக்க டி சேரம் ஆகிய இருவரும் முன்னர் காணப்பட்ட தேர்வுக்குழுவிலும் உறுப்பினர்களாக காணப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.




















