பாகிஸ்தானுக்கு அபார வெற்றி, டெஸ்ட் தொடர் சமநிலை

212
pak v eng

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த இங்கிலாந்து அணி மொயீன் கான் சதத்தால் முதல் இனிங்ஸில் 328 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் ஆசாத் ஷபிக், யூனிஸ்கான் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 340 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

யூனிஸ்கான் 101 ஓட்டங்களுடனும், சர்பிராஷ் கான் 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பிராஷ் கான் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். யூனிஸ்கான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும் யூனிஸ்கான் மனம் தளறாமல் விளையாடினார். இதனால் தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவரது 6ஆவது இரட்டை இரட்டை சதம் ஆகும். இவரது இரட்டை  சதத்தால் பாகிஸ்தான் முதல் இனிங்ஸில் 542 ஓட்டங்கள் குவித்து சகல விக்கட்டுகளையும்இ ழந்தது. யூனிஸ்கான் 218 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பின், வோக்ஸ் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.

பின்னர் 214 ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்தது. அந்த அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இருந்தது.

பின்பு இன்று 4ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி யசீர் ஷாவின் சுழலிற்கு சிக்கி 253 ஓட்டங்களுக்கு சுருண்டது.  நிதானமாக போராடிய ஜொனி பெயர்ஸ்டோ 81 ஓட்டங்களைப் பெற்றார். இவரைத் தவிர மொயீன் அலி 32 ஓட்டங்களையும், ஜோ ரூட் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் யசீர் ஷா 5 விக்கட்டுகளை சரிக்க வஹாப் ரியாஸ் 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இங்கிலாந்து பெற்ற 253 ஓட்டங்களின் படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 13.1 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கட்டுகளால் இந்த 4ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது. பாகிஸ்தான் அணி சார்பாக அசார் அலி 30 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் சமி அஸ்லம் 12  ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்று பாகிஸ்தான் அணிக்கு உதவினார். இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என்று சமநிலையில் முடிவடைந்தது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக 6ஆவது இரட்டை சதம் பெற்ற யூனிஸ் கான் தெரிவு செய்யப்பட்டதோடு போட்டித் தொடரின்  ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் மற்றும் இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 24ஆம் திகதி பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. அந்தத் தொடர் ஆரம்பமாக முன்  பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியோடு அவர்களது மண்ணில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 328

மொயீன் அலி 108, அலஸ்டயர் குக் 35, ஜோ ரூட் 26, பேர்ஸ்டோ 55, கிறிஸ் வோக்ஸ் 45,

சுஹைல் கான் 68/5, வஹாப் ரியாஸ் 93/3, முஹமத் அமீர் 80/2

பாகிஸ்தான் – 542/10

யூனுஸ் கான் 218, அசாத் ஷபீக் 109, அசார் அலி 49, சர்ப்பராஸ் அஹமத் 44, முஹமத் அமீர் 39*

ஸ்டிவன் பின் 71/2, க்றிஸ் வோக்ஸ் 52/2

இங்கிலாந்து – 253

ஜோ ரூட் 39, ஜொனி பெயர்ஸ்டோ 81, மொயீன் அலி 39

யசீர் ஷா 71/5, வஹாப் ரியாஸ் 48/2

பாகிஸ்தான் – 42/0

அசார் அலி 30*, சமி அஸ்லம் 12*

பாகிஸ்தான் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி