இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of Pakistan 2025

36
Sri Lanka tour of Pakistan 2025

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் முத்தரப்பு T20I தொடர்களுக்கான பாகிஸ்தான் குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாம்களிலிருந்து இளம் வீரரான ஹஸன் நவாஸ் நீக்கப்பட்டுள்ளார். இவர் தன்னுடைய மூன்றாவது T20I போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

>>பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம்கள் அறிவிப்பு

எனினும் பின்னர் இவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பிரகாசிப்புகளை அணி பெற்றுக்கொள்ளவில்லை. இவருடைய திறமையை கருத்திற்கொண்டு ஐந்து போட்டிகளில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதேநேரம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த பாபர் அஷாம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் முத்தரப்பு T20I தொடர்களுக்கான குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த ஒருநாள் தொடருக்கான தலைவராக சஹீன் ஷா அப்ரிடி நீடிக்கப்பட்டுள்ளதுடன், சல்மான் அலி ஆகா T20I அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் அணியானது ஒருநாள் தொடரில் இலங்கை அணியை எதிர்வரும் 11ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், முத்தரப்பு T20I தொடரின் முதல் போட்டியில் சிம்பாப்வே அணியை எதிர்வரும் 17ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி

ஒருநாள் தொடருக்கான குழாம்

 

சஹீன் ஷா அப்ரிடி (தலைவர்), அப்ரார் அஹ்மட், பாபர் அஷாம், பஹீம் அஷ்ரப், பைசால் அக்ரம், பக்ஹர் ஷமான், ஹாரிஸ் ரவூப், ஹஸீபுல்லாஹ், ஹுசைன் தலாத், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசீம் ஜூனியர், நசீம் ஷா, சய்ம் ஆயுப், சல்மான் அலி ஆகா

முத்தரப்பு தொடருக்கான T20I குழாம்

 

சல்மான் அலி ஆகா (தலைவர்), அப்துல் சமாத், அப்ரார் அஹ்மட், பாபர் அஷாம், பஹீம் அஷ்ரப், பக்ஹர் ஷமான், மொஹமட் நவாஸ், மொஹமட் வசீம் ஜூனியர், மொஹமட் சல்மான் மிர்ஷா, நசீம் ஷா, ஷஹிப்ஷாடா பர்ஹான், சஹீன் ஷா அப்ரிடி, சய்ம் ஆயுப், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<