மேற்கிந்திய தீவுகளுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னி IPL கிண்ணத்தை வென்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்!
அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குழாத்தில் மிச்சல் ஓவன், மற்றும் மேட் குஹ்னமேன் ஆகிய இரண்டு வீரர்களுக்கும் முதல் தடவையாக T20I போட்டிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
எனினும் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரரான ஜேக் பிரசர்-மெக்கேர்க் அவுஸ்திரேலிய T20 குழாத்தில் உள்வாங்கப்படவில்லை. அத்துடன் சேவியர் பார்ட்லேட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய வீரர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் ஒருநாள் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த கிளன் மெக்ஸ்வெல், அதிரடி துடுப்பாட்ட வீரர் டிம் டேவிட் மற்றும் கெமரூன் கீரின் ஆகிய வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் அணியினை எதிர் கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான T20I தொடர் ஜூலை 19ஆம் திகதி ஆரம்பமாகுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அவுஸ்திரேலிய T20I குழாம்
மிச்சல் மார்ஷ் (தலைவர்), ஷோன் எப்போட், கூப்பர் கொன்னொலி, டிம் டேவிட், பென் ட்வார்ஷியஸ், நதன் எல்லிஸ், கேமரூன் கீரின், ஆரோன் ஹார்டி, ஜோஸ் ஹேசல்வூட், ஜோஸ் இங்லீஸ், ஸ்பென்ஷர் ஜோன்சன், மேட் குஹ்னமேன், கிளன் மெக்ஸ்வெல், மிச்சல் ஓவன், மெதிவ் ஷோர்ட், அடம் ஷம்பா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<