ஆஸி. தொடருக்காக இணைக்கப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட்-19!

Sri Lanka tour of Australia 2022

184

அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்திருந்த புதுமுக வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இவருடன் இலங்கை அணியின் உடற்கூறு பயிற்றுவிப்பாளர் டில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை குழாத்தினர் தற்போது, கொழும்பில் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் உள்ளனர். இந்தநிலையில், அவர்களுக்கு எடுக்கப்படும் கொவிட்-19 பரிசோதனையில், மேற்குறித்த இருவருக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே, இவர்கள் இருவரும் கொவிட்-19 விதிமுறைப்படி தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைகளை பெற்றுக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கொவிட்-19 சிகிச்சைகளை தொடர்ந்து எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குழாத்துடன் இணைந்துக்கொள்வர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாம் எதிர்வரும் 3ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு, அவுஸ்திரேலியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<