LPL தொடரிலிருந்து வெளியேறும் பினுர பெர்னாண்டோ

1067
Getty Images

2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரிலிருந்து இளம் வேகப் பந்துவீச்சாளரான பினுர பெர்னான்டோ வௌியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி LPL தொடரில் முதல் வெற்றி

கண்டி வொரியர்ஸ் அணிக்காக லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பினுர பெர்னாண்டோ, T20 உலகக் கிண்ணத்தொடரின் ஏற்பட்ட உபாதையில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையிலையே அவர், LPL தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பினுர பெர்னாண்டோ T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அபுதாபி மைதானத்தில் வைத்து மோதிய போட்டியில் உபாதைக்கு ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கண்டி வொரியர்ஸ் அணி பினுர பெர்னாண்டோவிற்குப் பதிலாக தமது அணிக்குழாத்தினுள் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான கசுன் ராஜிதாவிற்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

>>LPL 2021 இல் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள்

தற்போது ஹோட்டல் தனிமைப்படுத்தலில் காணப்படும் கசுன் ராஜித, தனது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் கண்டி வொரியர்ஸ் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், LPL தொடருக்கான முதல் போட்டியினை தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன் ஆரம்பித்திருக்கும் கண்டி வொரியர்ஸ் அணி, தமது அடுத்த போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை இன்று (07) எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<