அசத்தல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெதிவ்ஸ், மெண்டிஸ்

4415

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை நோக்கியிருந்த இலங்கை அணியை, அற்புத சதங்களின் மூலமாக முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் மீட்டெடுத்துள்ளனர்.

இலங்கை அணியை இன்னலுக்கு தள்ளியுள்ள லேத்தமின் கன்னி இரட்டைச்சதம்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் …..

நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, வெறும் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக 276 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டயாத்தில் இருந்தது.  இவ்வாறான நிலையில் களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசால் மெண்டிஸ் நியூசிலாந்து அணிக்கு எவ்வித வாய்ப்புகளை வழங்காமல் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடினர்.

முக்கியமாக இன்றைய தினம் முழுவதும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து ஆட்டநேர முடிவில் 259 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை அடைவதற்கு 37 ஓட்டங்களை மாத்திரமே பெறவேண்டும்.

இன்றைய ஆட்டநேரத்தின் உணவு இடைவேளையின் போது குசல் மெண்டிஸ் தனது அரைச்சதத்தை கடக்க, மெதிவ்ஸ் அவருடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். தொடர்ந்து  ஆட்டத்தை நிதானமாக நகர்த்திய இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை தேநீர் இடைவேளையின் போது 197 ஆக உயர்த்தினர்.

தேநீர் இடைவேளையின் பின்னர், குசல் மெண்டிஸ் தனது 6வது டெஸ்ட் சதத்தை கடக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் 9வது சதத்தை கடந்து, நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவை இன்றைய நாளில் தகர்த்திருந்தனர். இன்றைய ஆட்டநேர முடிவில் மெதிவ்ஸ் 117 ஓட்டங்களையும், மெண்டிஸ் 116 ஓட்டங்களையும் பெற்றிருந்ததுடன், இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 246 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர்.

இந்த இணைப்பாட்டமானது நான்காவது விக்கெட்டுக்காக இலங்கை அணி சார்பில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டமாக பதியப்பட்டது. 2009ம் ஆண்டு கராச்சியில் வைத்து திலான் சமரவீர மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் பெற்ற 437  ஓட்ட இணைப்பாட்டமே, இன்றும் இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பெற்றிருக்கிறது.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட மெதிவ்ஸ், திமுத் மற்றும் டிக்வெல்ல

வெலிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள ….

அதேநேரம், டெஸ்ட் போட்டியின் தினம் ஒன்றில், விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஆட்டத்தை நிறைவுசெய்த சாதனையை சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் 2008ம் ஆண்டு தென்னாபிரிக்க அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் 405 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 282 ஓட்டங்களை பெற்றதுடன், நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்