ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க நியூசிலாந்து வீரர்களுக்கு அனுமதி

96
NZ players

இவ்வருட இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் தொற்றால் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல் தொடரை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதுடன், இந்திய மத்திய அரசிடமும் அனுமதி கேட்டுள்ளது. 

வீடுகளில் இருந்து இடம்பெறவுள்ள ஐ.பி.எல் வர்ணனை

இந்த நிலையில், மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் அதற்கான வேலைகளை துரிதமாக செயற்படுத்தி 10 நாட்களுக்குள் போட்டி அட்டவணையை தயாரிக்க ஐ.பி.எல் நிர்வாகம் தயாராகி வருகிறது.

இதனிடையே, இம்முறை ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்களா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக இருக்கிறோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபையின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிச்சார்ட் ப்ரூக் கூறுகையில் ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் எமது வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது தொடர்பில் அவர்கள்தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். 

அதிலும் குறிப்பாக, தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதான் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், அதை வீரர்கள் மறுத்தால் அதிசயம் என்று கூறலாம். 

எனினும், சில விடயங்களில் அந்தந்த வீரர்கள்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள கடும் முயற்சி எடுக்க வேண்டியது கடமை. போட்டி தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வீரர்களுக்கு வழங்குவோம் என்றார்.

Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124

நியூசிலாந்தை சேர்ந்த ஜிம்மி நீஷம் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), லூக்கி பெர்குசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மிட்செல் மெக்கிளேனகன் மற்றும் ட்ரென்ட் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்), கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மிட்செல் சான்ட்னெர் (சென்னை சுப்பர் கிங்ஸ்) ஆகிய வீரர்கள் இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஸ்டீப் பிளெமிங் (சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர்), ஷேன் பொன்ட் (மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளர்), மைக் ஹெசன் (ரோயல் செலன்ஞர்ஸ் தலைமைப் பயிற்சியாளர்) உள்ளிட்ட பயிற்சியாளர்களும் இம்முறை ஐ.பி.எல் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க