T20 உலகக் கிண்ணத்திற்காக அனுபவமிக்க நெதர்லாந்து குழாம் அறிவிப்பு

ICC 2026 T20 World Cup

2
ICC 2026 T20 World Cup

இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட நெதர்லாந்து கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>LPL வீரர்கள் வரைவுக்கான திகதிகள் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஸ்கொட் எட்வாட்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் நெதர்லாந்து அணியில் அனுபவமிக்க வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னணி வீரர்களான பாஸ் டி லீடே, லோகன் வான் பீக் மற்றும் அதிரடி வீரர் ரோலோ(f)ப் வான் டெர் மெர்வ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை போல் வோன் மீக்ரன் மற்றும் டிம் வான் டெர் குக்டன் ஆகியோருடன் பிரெட் கிளாசென் அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக காணப்பட சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆசிய ஆடுகளங்களை எதிர்கொள்ள ஆர்யன் தட் மற்றும் சகீப் சுல்பிகர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தொடரில் நெதர்லாந்து அணி குழு A இல் இடம் பெற்றுள்ளது. குழு A இல் நெதர்லாந்து தவிர நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் உள்ளன. நெதர்லாந்து தனது முதல் லீக் போட்டியில் பெப்ரவரி 7ஆம் திகதி கொழும்பில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

நெதர்லாந்து குழாம்

 

ஸ்கொட் எட்வாட்ஸ், கொலின் அக்கர்மேன், நோவா குரோஸ், பாஸ் டி லீடே, ஆர்யன் தட், பிரெட் கிளாசென், கைல் க்ளீன், மைக்கேல் லெவிட், சாக் லயன்-கேச்செட், மேக்ஸ் ஓவ் டௌட், லோகன் வான் பீக், டிம் வான் டெர் குக்டன், ரோலோ(f)ப் வான் டெர் மெர்வ், பால் வான் மீக்ரன், சகீப் சுல்பிகர்

 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<