2026ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான தகுதிகாண் போட்டிகள் நேபாளத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>அனுபவ பந்துவீச்சாளரை இழக்குமா இங்கிலாந்து?<<
நேபாளத்தின் கத்மாண்டு முல்பானியைச் சேர்ந்த இரண்டு மைதானங்கள் T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அடுத்த ஆண்டின் ஜனவரி 12 தொடக்கம் பெப்வரி 2 வரை தகுதிகாண் போட்டிகளுக்கான காலப்பகுதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு குறிப்பிட்ட அணிகளில் இருந்து 4 அணிகள், ஐக்கிய இராச்சியத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்காக தெரிவு செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ், அயர்லாந்து, நேபாளம், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிற்கான முதல் ஐந்து அணிகளாக உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, எஞ்சிய 5 அணிகளும் பிராந்திய தொடர்கள் மூலமாக தெரிவு செய்யப்படவிருக்கின்றன.
தொடரின் போட்டிகள் இரண்டு குழுக்களில் ஐந்து அணிகள் இணைக்கப்பட்டு நடைபெறும் என்பதோடு, குழுநிலைப் போட்டிகள் மூலம் தொடரின் ”சுப்பர் 6” சுற்றுக்கு ஒவ்வொரு குழுக்களில் இருந்தும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் இருந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை இரண்டு அணிகள் பெறவிருக்கின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<