Home Tamil NSL கடைசி லீக்கில் சதமடித்த மினோத், லஹிரு மதுசங்க

NSL கடைசி லீக்கில் சதமடித்த மினோத், லஹிரு மதுசங்க

National Super League 2023

107
National Super League 2023 - 19th February

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் இன்று (19) நிறைவுக்கு வந்தன.

மினோத் பானுக மற்றும் அஷான் பிரயன்ஜனின் அபார சதங்கள், லஹிரு சமரகோனின் 6 விக்கெட்டுகள் மற்றும் வனிந்து ஹஸரங்கவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் சகலதுறையிலும் பிரகாசித்த தம்புள்ள அணி, கொழும்பு அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

லஹிரு மதுசங்க சதம் கடந்து பெற்றுக் கொண்ட 194 ஓட்டங்கள் மற்றும், ரொன் சந்திரகுப்த, ரவிந்து பெர்னாண்டோ, அவிஷ்க தரிந்து மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோரது அரைச் சதங்கள் மூலம் 2ஆவது இன்னிங்ஸில் வலுவான துடுப்பாட்டத்தை வெளிடுப்பத்திய ஜப்னா அணி, காலிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

ஜப்னா எதிர் காலி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை குவித்தது. காலி அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, சொஹான் டி லிவேராவின் அபார சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை எடுத்தது.

இந்த நிலையில், 555 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தவாறு இன்றைய தினம் தமது 2ஆவது இன்னிங்ஸினைத் தொடர்ந்த ஜப்னா அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 584 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

>> ரொன், அவிஷ்கவின் அரைச் சதங்களால் முன்னிலை பெற்ற ஜப்னா அணி

ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க, 194 ஓட்டங்களை எடுத்து 6 ஓட்டங்களினால் இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபுறத்தில், ரொன் சந்திரகுப்த (86), ரவிந்து பெர்னாண்டோ, அவிஷ்க தரிந்து (62) மற்றும் ஜெப்ரி வெண்டர்சே (50) ஆகியோர் அரைச் சதங்கள் அடித்து வலுச்சேர்த்தனர்.

காலி அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஜய 3 விக்கெட்டுகளையும், அசங்க மனோஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து 456 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போது மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற காலி அணி, அதற்கான புள்ளிகளை பெற்றுக் கொண்டதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றது.

Result

Match drawn

Team Galle
258/10 (78) & 50/3 (14.2)

Team Jaffna
130/10 (38) & 584/9 (143.4)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Vishad Randika b Kaumal Nanayakkara 39 65 5 0 60.00
Ron Chandraguptha  c Vishad Randika b Mohammad Shiraz 1 5 0 0 20.00
Deshan Dias c Vishad Randika b Mohammad Shiraz 0 2 0 0 0.00
Janith Liyanage c Pathum Kumara b Mohammad Shiraz 20 24 3 0 83.33
Avishka Tharindu c Vishad Randika b Mohammad Shiraz 7 7 1 0 100.00
Lahiru Madushanka lbw b Akila Dananjaya 11 39 2 0 28.21
Ravindu Fernando  c Pasindu Sooriyabandara b Kaumal Nanayakkara 2 8 0 0 25.00
Binura Fernando lbw b Akila Dananjaya 37 55 3 2 67.27
Jeffrey Vandersay  run out (Nimesh Vimukthi) 6 10 0 0 60.00
Shashika Dulshan lbw b Mohammad Shiraz 0 10 0 0 0.00
Eshan Malinga not out 0 7 0 0 0.00


Extras 7 (b 0 , lb 3 , nb 4, w 0, pen 0)
Total 130/10 (38 Overs, RR: 3.42)
Bowling O M R W Econ
Mohammad Shiraz 15 4 60 5 4.00
Dhananjaya Lakshan 4 0 28 0 7.00
Asanka Manoj 2 1 2 0 1.00
Akila Dananjaya 8 1 24 2 3.00
Kaumal Nanayakkara 9 3 13 2 1.44
Batsmen R B 4s 6s SR
Sohan de Livera c Deshan Dias b Eshan Malinga 143 218 16 0 65.60
Sangeeth Cooray c Ravindu Fernando  b Lahiru Madushanka 3 5 0 0 60.00
Lakshan Edirisinghe c & b Lahiru Madushanka 16 26 3 0 61.54
Pasindu Sooriyabandara st Deshan Dias b Shashika Dulshan 16 24 3 0 66.67
Dhananjaya Lakshan lbw b Binura Fernando 1 4 0 0 25.00
Pathum Kumara c Ravindu Fernando  b Shashika Dulshan 48 116 4 0 41.38
Vishad Randika c Deshan Dias b Binura Fernando 0 4 0 0 0.00
Akila Dananjaya c Yasiru Rodrigo b Shashika Dulshan 3 19 0 0 15.79
Mohammad Shiraz not out 5 37 0 0 13.51
Asanka Manoj b Shashika Dulshan 1 3 0 0 33.33
Kaumal Nanayakkara c Deshan Dias b Navod Paranavithana 5 19 1 0 26.32


Extras 17 (b 2 , lb 6 , nb 7, w 2, pen 0)
Total 258/10 (78 Overs, RR: 3.31)
Bowling O M R W Econ
Binura Fernando 17 4 52 2 3.06
Lahiru Madushanka 9 1 42 2 4.67
Ravindu Fernando  12 0 39 0 3.25
Shashika Dulshan 21 5 37 4 1.76
Eshan Malinga 7 0 27 1 3.86
Navod Paranavithana 6 0 8 1 1.33
Janith Liyanage 3 0 15 0 5.00
Jeffrey Vandersay  3 0 30 0 10.00
Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Asanka Manoj b Akila Dananjaya 6 16 1 0 37.50
Ron Chandraguptha  c Vishad Randika b Akila Dananjaya 86 169 8 0 50.89
Deshan Dias c Nimesh Vimukthi b Asanka Manoj 12 17 1 0 70.59
Janith Liyanage run out (Vishad Randika) 40 41 3 2 97.56
Avishka Tharindu lbw b Mohammad Shiraz 62 115 4 1 53.91
Shashika Dulshan c Lakshan Edirisinghe b Akila Dananjaya 0 3 0 0 0.00
Lahiru Madushanka lbw b Mohammad Shiraz 194 228 21 6 85.09
Ravindu Fernando  c Vishad Randika b Asanka Manoj 73 114 6 2 64.04
Binura Fernando b Dhananjaya Lakshan 34 59 2 1 57.63
Jeffrey Vandersay  not out 50 95 8 0 52.63
Eshan Malinga not out 0 3 0 0 0.00


Extras 27 (b 5 , lb 11 , nb 8, w 3, pen 0)
Total 584/9 (143.4 Overs, RR: 4.06)
Bowling O M R W Econ
Mohammad Shiraz 27.4 2 100 2 3.65
Sangeeth Cooray 12 1 35 0 2.92
Akila Dananjaya 34 2 139 3 4.09
Asanka Manoj 22 1 100 2 4.55
Kaumal Nanayakkara 26 4 119 0 4.58
Lakshan Edirisinghe 2 0 5 0 2.50
Dhananjaya Lakshan 20 4 70 1 3.50


Batsmen R B 4s 6s SR
Sohan de Livera c Navod Paranavithana b Eshan Malinga 4 15 1 0 26.67
Sangeeth Cooray c Navod Paranavithana b Binura Fernando 5 9 1 0 55.56
Lakshan Edirisinghe not out 18 38 1 0 47.37
Pasindu Sooriyabandara b Shashika Dulshan 19 26 1 0 73.08


Extras 4 (b 0 , lb 0 , nb 2, w 2, pen 0)
Total 50/3 (14.2 Overs, RR: 3.49)
Bowling O M R W Econ
Binura Fernando 4 1 10 1 2.50
Eshan Malinga 5 2 18 1 3.60
Navod Paranavithana 1 0 4 0 4.00
Shashika Dulshan 2.2 0 9 1 4.09
Janith Liyanage 2 0 9 0 4.50



கொழும்பு எதிர் தம்புள்ள

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, அஷான் பிரியன்ஜனின் சதம் மற்றும் மினோத் பானுகவின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 341 ஓட்டங்களைக் குவித்தது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக களமிறங்கிய கொழும்பு அணி, ரொஷேன் சில்வா (65) மற்றும் கிரிஷான் சன்ஜுல (57) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களை எடுத்தது. தம்புள்ள அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 63 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பின்னர், 84 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை இன்று தொடர்ந்த தம்புள்ள அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 401 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் மினோத் பானுக சதம் கடந்து 186 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் துஷான் விமுக்தி 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

>> தம்புள்ள அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க

அதனைத் தொடர்ந்து 485 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, 110 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போது போட்டியின் நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் பிரமோத் மதுவன்த அரைச் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், குசல் பெரேரா 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.

எனவே இந்தப் போட்டியின் முதலாம் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் மூலம் தம்புள்ள அணி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கொண்டதுடன், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்து அரை இறுதியில் விளையாடுகின்ற வாய்ப்பை உறுதி செய்தது.

இதேவேளை, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை காலி அணி பெற, கண்டி மற்றும் ஜப்னா ஆகிய அணிகள் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

இதன்படி, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Result

Match drawn

Team Colombo
257/10 (85.2) & 110/3 (32)

Team Dambulla
341/10 (105) & 401/10 (101.5)

Batsmen R B 4s 6s SR
Nimesh Gunasinghe c & b Himesh Ramanayake 19 37 1 0 51.35
Leo Fransisco c Pramod Maduwantha b Himesh Ramanayake 26 61 4 0 42.62
Dilan Jayalath lbw b Himesh Ramanayake 0 9 0 0 0.00
Sanoj Darshika c Roshane Silva b Tharindu Ratnayaka 43 56 4 1 76.79
Minod Bhanuka c Krishan Sanjula b Nuwan Pradeep  73 123 11 0 59.35
Ashan Priyanjan lbw b Dushan Vimukthi 114 192 11 0 59.38
Wanindu Hasaranga c Navindu Nirmal b Nuwan Pradeep  6 11 1 0 54.55
Chamindu Wijesinghe c Navindu Nirmal b Himesh Ramanayake 27 82 0 0 32.93
Ranitha Liyanarachchi not out 23 42 2 0 54.76
Lahiru Samarakoon c Lakshitha Manasinghe b Dushan Vimukthi 0 3 0 0 0.00
Duvindu Tillakaratne run out (Pramod Maduwantha) 5 18 0 0 27.78


Extras 5 (b 1 , lb 0 , nb 4, w 0, pen 0)
Total 341/10 (105 Overs, RR: 3.25)
Bowling O M R W Econ
Nuwan Pradeep  22 2 67 2 3.05
Dushan Vimukthi 27 6 72 2 2.67
Himesh Ramanayake 24 3 76 4 3.17
Lakshitha Manasinghe 13 0 65 0 5.00
Tharindu Ratnayaka 19 3 60 1 3.16
Batsmen R B 4s 6s SR
Krishan Sanjula c Leo Fransisco b Lahiru Samarakoon 57 81 12 0 70.37
Navindu Nirmal c Wanindu Hasaranga b Lahiru Samarakoon 46 128 7 0 35.94
Kusal Janith b Lahiru Samarakoon 0 1 0 0 0.00
Dushan Vimukthi c Minod Bhanuka b Lahiru Samarakoon 0 3 0 0 0.00
Charith Asalanka c Dilan Jayalath b Duvindu Tillakaratne 4 10 0 0 40.00
Roshane Silva b Wanindu Hasaranga 65 152 4 0 42.76
Lakshitha Manasinghe b Ashan Priyanjan 20 31 2 0 64.52
Pramod Maduwantha c Wanindu Hasaranga b Lahiru Samarakoon 24 57 2 0 42.11
Tharindu Ratnayaka c Lahiru Samarakoon b Wanindu Hasaranga 23 38 3 0 60.53
Himesh Ramanayake b Lahiru Samarakoon 7 20 1 0 35.00
Nuwan Pradeep  not out 0 0 0 0 0.00


Extras 11 (b 0 , lb 1 , nb 9, w 1, pen 0)
Total 257/10 (85.2 Overs, RR: 3.01)
Bowling O M R W Econ
Lahiru Samarakoon 18 4 63 6 3.50
Ranitha Liyanarachchi 10.2 2 42 0 4.12
Chamindu Wijesinghe 8.4 2 21 0 2.50
Wanindu Hasaranga 26.2 6 70 2 2.67
Duvindu Tillakaratne 14 2 37 1 2.64
Ashan Priyanjan 8 1 23 1 2.88
Batsmen R B 4s 6s SR
Nimesh Gunasinghe c Tharindu Ratnayaka b Dushan Vimukthi 17 44 2 0 38.64
Leo Fransisco c Lakshitha Manasinghe b Dushan Vimukthi 7 14 1 0 50.00
Dilan Jayalath c Krishan Sanjula b Dushan Vimukthi 0 8 0 0 0.00
Sanoj Darshika c Pramod Maduwantha b Lakshitha Manasinghe 29 57 4 0 50.88
Minod Bhanuka not out 186 216 19 3 86.11
Ashan Priyanjan b Tharindu Ratnayaka 32 82 2 0 39.02
Wanindu Hasaranga b Tharindu Ratnayaka 40 28 5 2 142.86
Chamindu Wijesinghe c & b Nuwan Pradeep  38 72 5 0 52.78
Lahiru Samarakoon b Dushan Vimukthi 8 11 2 0 72.73
Duvindu Tillakaratne c Pramod Maduwantha b Dushan Vimukthi 27 64 4 1 42.19
Ranitha Liyanarachchi c Lakshitha Manasinghe b Tharindu Ratnayaka 8 20 1 0 40.00


Extras 9 (b 1 , lb 3 , nb 5, w 0, pen 0)
Total 401/10 (101.5 Overs, RR: 3.94)
Bowling O M R W Econ
Himesh Ramanayake 11 1 34 0 3.09
Dushan Vimukthi 32 3 121 5 3.78
Nuwan Pradeep  19 4 48 1 2.53
Tharindu Ratnayaka 22.5 2 111 3 4.93
Lakshitha Manasinghe 11 0 60 1 5.45
Pramod Maduwantha 6 1 23 0 3.83


Batsmen R B 4s 6s SR
Krishan Sanjula c Lahiru Samarakoon b Ranitha Liyanarachchi 0 3 0 0 0.00
Navindu Nirmal c Wanindu Hasaranga b Nimesh Gunasinghe 30 81 3 0 37.04
Pramod Maduwantha not out 53 81 5 0 65.43
Kusal Janith c Ranitha Liyanarachchi b Dilan Jayalath 24 25 3 1 96.00
Roshane Silva not out 1 3 0 0 33.33


Extras 2 (b 1 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 110/3 (32 Overs, RR: 3.44)
Bowling O M R W Econ
Ranitha Liyanarachchi 6 0 15 1 2.50
Duvindu Tillakaratne 2 0 2 0 1.00
Ashan Priyanjan 3 0 6 0 2.00
Wanindu Hasaranga 4 2 10 0 2.50
Lahiru Samarakoon 2 0 6 0 3.00
Nimesh Gunasinghe 5 0 25 1 5.00
Sanoj Darshika 6 0 19 0 3.17
Dilan Jayalath 4 0 26 1 6.50



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<