செரியட் (Chariot) உணவகத்தின் விளம்பரத் தூதுவரானார் பானுக ராஜபக்ஷ

295

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்டவீரரான பானுக ராஜபக்ஷ, செரியட் உணவகத்தின் (Restaurant) விளம்பரத் தூதுவராக (Brand Ambassador) நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> சர்ரே அணியுடன் இணையும் சுனில் நரைன் <<

பானுக ராஜபக்ஷவினை செரியட் உணவகத்தின் விளம்பரத் தூதுவராக நியமனம் செய்யும் நிகழ்வு நேற்று (09) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசியிருந்த பானுக்க ராஜபக்ஷ இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

”நான் இப்போது இந்திய பிரீமியர் லீக் போட்டிகளை இலக்காகக் கொண்டு செரியட் வியாபார சின்னத்திற்கு விளம்பரத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றேன். கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு இலங்கையில் கைகொடுக்கும் செரியட் வியாபாரச் சின்னம் கட்டாயம் கௌரவிக்கப்பட வேண்டும். இலங்கையில் அவர்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன்.”

மறுமுனையில் பானுக ராஜபக்ஷவினை தமது விளம்பரத் தூதுவராக மாற்றியது தமது வியாபார விருத்திற்கு உதவியாக இருக்கும் என Asriel குழுமம் மற்றும் செரியட் உணவகத்தின் தலைமை அதிகாரியாக காணப்படுகின்ற இருக்கும் ஷிரான் பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

>> டெஸ்ட் சகலதுறை வீரர்களில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா <<

இலங்கையின் உணவு வர்த்த துறையில் கடந்த 1986ஆம் ஆண்டிலிருந்து முன்னணியில் திகழும் செரியட் நிறுவனம், கடந்த மூன்று தசாப்தங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாதமொன்றுக்கு 1500 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகின்ற Asriel குழுமம், பல விருதுகளை வென்றிருப்பதோடு கிட்டதட்ட 300 பணியாளர்களையும் தமக்காக கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<