இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர அணித்தலைவரும், துடுப்பாட்ட வீரருமான மஹேந்திர சிங் டோனி ஐ.சி.சி. இன் வரலாற்று கதநாயகர்கள் (ICC Hall of Fame) பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
>>தாய்வான் பகிரங்க மெய்வல்லுனரில் டில்ஹானி, சமோத் பதக்கம் வென்று அபாரம் <<
சுமார் 14 வருடகாலம் இந்திய அணிக்காக சேவைகளை வழங்கிய டோனியைக் கெளரவிக்கும் விதமாகவே அவரினை ஐ.சி.சி. வரலாற்று கதநாயகர்கள் பட்டியலில் உள்வாங்கியிருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்து வகை ஐ.சி.சி. கிண்ணங்களையும் வென்ற ஒரே தலைவராக காணப்படும் டோனி 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 10773 ஓட்டங்கள் வரை குவித்துள்ளதோடு 90 டெஸ்ட், 98 T20i போட்டிகளிலும் பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் விக்கெட்காப்பு வீரராக டோனி 829 ஆட்டமிழப்புகளுக்கு உதவியமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தியாவில் இருந்து வரலாற்று கதநாயகர்கள் பட்டியலில் உள்வாங்கப்படும் 11ஆவது வீரர் டோனி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேநேரம் டோனி தவிர இம்முறைக்கான ஐ.சி.சி. இன் வரலாற்று கதநாயகர்கள் பட்டியலில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவன்களான கிரேம் ஸ்மித், ஹஷிம் அம்லா ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<