மெஹிதி ஹஸன் நெதர்லாந்து T20 தொடரில் நீக்கம்

31
Mehidy-Hasan-Miraz

தனது மனைவியின் சுகயீனம் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான மெஹிதி ஹஸன் மிராஸ், நெதர்லாந்து அணியுடனான T20 தொடரில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>> அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறும் றபாடா

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஆசியக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில், நெதர்லாந்து அணியுடன் T20 தொடரில் ஆடுகின்றது 

நெதர்லாந்து தொடர் மற்றும் ஆசியக் கிண்ணம் என்பவற்றுக்காக பங்களாதேஷ் ஏற்கனவே பயிற்சிகளை ஆரம்பித்த நிலையில், இன்று (20) தொடக்கம் செப்டம்பர் 04 வரை, மெஹிதி ஹஸன் மனைவியின் சுகயீனம் காரணமாக பங்களாதேஷ் அணியிடம் விடுமுறை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவர் இந்த காலப்பகுதியில் நடைபெறும் நெதர்லாந்து T20 தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பினை இழக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

விடயங்கள் இவ்வாறு காணப்பட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது சில்லேட்டில் தற்போது ஆசியக் கிண்ணத் தொடரிற்காக தயராகி வருவதோடு, நெதர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முறையே ஒகஸ்ட் 30, செப்டம்பர் 01 மற்றும் 03 ஆம் திகதிகளில் பங்கேற்கவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<