மலேசிய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இலங்கை U19 தேசிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஆஷஸ் தொடர் 2025: முதல் டெஸ்டில் ஸ்மித்திற்கு தலைமைப் பொறுப்பு<<
அதன்படி இந்த மலேசிய அணியானது குறிப்பிட்ட T20I தொடருக்காக ஒக்டோபர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடையவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி. இன் அங்கத்துவ நாடுகளின் (ICC Associate Nations) கிரிக்கெட் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டத்திற்கு, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வழங்கும் ஆதரவின் ஒரு அங்கமாகவே இந்த T20 தொடர் அமைந்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
அதேநேரம் இந்த T20 தொடரானது இளம் இலங்கை வீராங்கனைகளுக்கு சர்வதேச அனுபவத்தைப் பெறுவதற்கு, ஒரு சந்தர்ப்பமாகவும் பார்க்கப்படுகின்றது.
தொடர் அட்டவணை
| திகதி | போட்டி | இடம் | நேரம் |
| நவம்பர் 2 | முதலாவது T20 | NCC | மு.ப. 10:00 மணி |
| நவம்பர் 3 | இரண்டாவது T20 | கோல்ட்ஸ் | பி.ப. 2:00 மணி |
| நவம்பர் 5 | மூன்றாவது T20 | கோல்ட்ஸ் | மு.ப. 10:00 மணி |
| நவம்பர் 7 | நான்காவது T20 | NCC | மு.ப. 10:00 மணி |
| நவம்பர் 10 | ஐந்தாவது T20 | கோல்ட்ஸ் | மு.ப. 10:00 மணி |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















